Search This Blog

Wednesday, September 21, 2022

ஜாதகத்தில் 7ம் இடமும் கூட்டு தொழிலும்

 

7ம் இடமும் கூட்டுத் தொழிலும்

என்னுடைய வியாபார கூட்டாளி என்னை ஏமாற்றி விட்டார். நான் கடன் காரனாகி விட்டேன் என்று கூறினால் அவருடைய ஜாதகத்தில் 7ம் இடம் பாதிப்பாகி உள்ளது என்பதை குறிக்கும்.

7ம் இடம் எதை குறிக்கும் ?

7ம் இடம் கூட்டுத்தொழில் மனைவி நண்பர்களைக் குறிக்குமிடம் .அதன் அதிபதி 6. 8. 12ல் மறைந்தா லும் நீசம் அஸ்தமனம் பெற்றாலு ம் ,7ம் அதிபதி அம்சத்தில் நீச்சம் அடையக்கூடாது , 7ம் அதிபதி கிரஹ யுத்தத்தில் தோல்வி அடைய கூடாது , அவர்கள் கூட்டுத் தொழில் செய்ய வே கூடாது. அப்ப டி மீறி செய்தால் வியாபார கூட்டா ளியால் ஏமாற்றப்படுவார். 7ம் இடம் பாதிக்கபட்டு இருந்தால் , லக்கினத்திற்கு பாபிகள் பார்வை ஏற்பட்டு இருந்தாலும் ,கூட்டு வியாபாரம் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும் . ஆனால் 7ம் இடத்தையோ அல்லது 7ம் அதிபதியே குரு பார்வை இட் டால் கூட்டு தொழில் நஷ்டத்தை தராது .

பாதகாதிபதி

உபய ராசிகளான மிதுனம் கன்னி தனுசு மீனம் லக்னத்திற்கு 7ம் அதிபதியே பாதகதிபதி ஆக வருவதால் இவர்கள் நிச்சயமாக கூட்டுத்தொழில் செய்யவே கூடாது.ஆனால் உபய லக்கினத்தி ற்கு பாதகாதிபதி ஆன 7ம் அதிபதி 6,8,12 ல் மறைந்து காணப்பட்டால் , கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம் என்று சொல்லுக்கு ஏற்ப கூட்டு தொழில் யோகத்தை தரும் .

புதன் வலுத்த ஜாதகம்

ஜாதகத்தில் புதன் வலுவாக உள்ள தா என்று பார்க்க வேண்டும் .புதன் நண்பனைக் குறிப்பது ஜாதகத்தி ல்புதன் கூட்டுத்தொழில் செய்பவ ர்களுக்கு 6,8,12ல் மறையக்கூடாது அல்லது கெடக்கூடாது .

ஜாதகத்தில் 10,11,2ம் இடம்

ஜாதகத்தில் 10ம் இடம் தொழில் 11ம் இடம் லாபம் 2ம் இட3ம் தனம் இதற்கு ஏற்றபடி சம பலமுள்ள ஜாதகரை சம வலுவுள்ள ஜாதகரை கூட்டுத் தொழிலுக்கு இணைக்க வேண்டும்.

7ம் இடமும் மனைவியும்

எவ்வளவுதான் நெருங்கிய நண்பர்களை இருந்தாலும் ,ஏழரை அட்டமச்சனியில் கருத்து வேற்றுமையைக் கொடுத்து கூட்டு தொழிலை நசுக்கி விடும்.7ம் இடம் மனைவி குறிக்கும். 7ம் இடம் கெட்டுபோனவர்கள் இவர்களின் மனைவியே சிலசமயம் இதில் பிரச்சனையாகி விடுவார். இது அவர்களின் கர்மா என்பதால் அதை அவர்கள் கடந்துதான் போக வேண்டும்.

கூட்டு தொழிலை யார் நிர்வாகிப்பார் ?

லக்த்திற்கு 7ம் இடம் வலுப்பெற்றவ ர் தான் கூட்டு தொழிலை நிர்வாகி ப்பர். விரிவாக்கம் செய்வார் ..7 ம், அதிபதி வலுப்பெற்றவரே கூட்டுத் தொழிலில் நிர்வாக கூட்டாளியாக இருப்பர்.

காம யோகம்

7ம் அதிபதி 7ம் இடத்தில ஆட்சி பெற்று இருந்தால் , காம யோகத் தை தரும். ஏழாமிடமும் , ஏழுக்கு டையவன் பலன் பெற்றிருந்தால் மனைவியால் நிறைவு பெற்ற வாழ்க்கை 8அடைந்தவராகவும் , எப்போதும் பந்துமித்திரர்களால் சூழப்பட்டவ ராகவும் , தனவானா கவும் , தந்தையைவிடச் சிறந்த நிலையை டைந்தவராகவும் இருப்பர் .நல்ல இறைம் , தந்தை யை விட உயர்வு தொழில் வாபம் , அரசு சன்மானம்,

ஏகதார விரதனாயிருத்தல் யோக முள்ள களத்தில் புத்திர பந்துப் பேறு நல்ல குணம் காமயோக பலன்களாகும்7குடைய ஆட்சி பெற்று குரு பார்வையும் பெற்றதால் காம யோகத்தால் இன்புறுவான்

மகாராஜா வீர சிவாஜியின் ஜாதகம்

மகாராஜா வீர சிவாஜியின் ஜாதகத்தில் 7 - ஆம் அதிபதிம் உச்சம் , 7-ல் லக்கினாதிபதியுடன் குரு இணைந்துள்ளர்,சனியை குரு பார்வை யிடுகிறார் . சுக்கிரனும் பார்வையிடுகிறார் . காமயோகம் அமைந்து ராஜவம்சத்தில் பிறக்கா த சிவாஜி ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் . தந்தையைவிட உயர்ந்த நிலைக்கு வந்தார் . உலகம் போற்ற வரலாற்றில் இடம் பெற்றார் .

கூட்டு தொழில் செய்ய வேண்டுமா ?

கூட்டு தொழில் செய்ய வேண்டுமா ? உங்கள் ஜாதகத்தில் 7ம் இடம் , 7ம் அதிபதி வலுவாக உள்ளாரா என்று பார்த்து தொடங்கினால் கூட்டு தொழில் அபரீத யோகத்தை கொடுக்கும் .

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க , ஜாமக்கோள் பிரசன்னம் மூலமாக உங்கள் அணைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண.ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

May be an image of text that says 'புதன் சுக்கிரன் ராகு செவ்வாய் சூரியன் குரு ராசி காமயோகம் மகராஜா வீர சிவாஜியின் ஜாதகம் லக்கினம் கேது சனி சந்திரன்'
Like
Comment
Share

No comments:

Post a Comment