Search This Blog

Wednesday, September 21, 2022

ஆட்டிவைக்கும் அஷ்டமச்சனி அஷ்டமச்சனியால் படும் வேதனைகள்

 

ஆட்டிவைக்கும் அஷ்டமச்சனி

அஷ்டமச்சனியால் படும் வேதனைகள்

ஜாதகர் மிதுன லக்கினம் மிதுன ராசி - கடுமையான காலசர்ப்ப தோஷம் -ஜாதகருக்கு அஷ்டம சனி நடை பெற்று வருகிறது . நான் சம்பாதித்த பணம் ,நகை மற்றும் மரியாதை அனைத்தும் அழிந்து போனது என் 9 வயது மகளுக்கும் ,எனக்கும் மிதுனம் ராசி புனர்பூசம், தற்போது விவாகரத்து வழக்கு 2வருடமாக நடை பெற்று வருகிறது. மனைவிக்கு எதிராக ஆதாரம் இருந்தும் முடிவு பெறாமல் உள்ளது எப்போது வழக்கு முடியும், என் குழந்தை என்னிடம் வர வழி உண்டா, வழி சொல்லவும். (குழந்தையின் மேல் பாசம்) எனக்கு அவ்வப்போது கோவம் வருகிறது என் மனைவிக்கு எதிரான ஆதாரத்தை அனைவரிடமும் காண்பித்து விடலாம் என்று தோன்றுகிறது ஆனால் என் குழந்தை எதிர்காலம் முழுவதும் அழிந்து விடும் என்று பயமாக உள்ளது

7ம் அதிபதியான குரு 6ல் மறைவு

இவருடைய ஜாதகத்தில் 7ம் அதிபதியான குரு 6ல் மறைவு. அதனால் குடும்ப வாழ்வு சோபிக்க வில்லை. மேலும் 6ம் அதிபதி நீச்சம் பெற்றதால் நோய் பாதிப்பு உண்டு மற்றும் வழக்குகளால் அல்லாடும் நிலை. அஷ்டம சனி இவரை புரட்டி போட்டுள்ளது.

சூரியன் செவ்வாய் சேர்க்கை

இவர் ஜாதகத்தில் 2ம் இடத்தில சூரியன் செவ்வாய் சேர்க்கை . இடுகதிர் செவ்வாய் எங்கு இணைந்தாலும் இரு தாரம்தானே என்கிறது ஒரு ஜோதிட பாடல்.

தற்போது மிதுன ராசிக்கு அஷ்டம சனி நடை பெறுகிறது

அஷ்டமத்து சனி இரண்டரை வருடங்கள் தான் இருக்கும் என்பத னால் கணவன் மனைவியிடையே வரும் பிரச்சனைகளை சற்றுப் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். 17 ஜனவரி 2023 அன்று அஷ்டம சனி மிதுன ராசிக்கு விலகுகிறது . அப்படி எவரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்து சென்றால் அவர்களின் திருமண வாழ்க்கை நலமாக இருக்கும். ஆனால் ஆண், பெண் இருவருமே விட்டுக்கொடுக்காமல் பிடிவாத மாக இருந்தார்கள் என்றால் நிச்சயம் அவர்களின் திருமணம் விவாகரத்தில் தான் முடியும்.

அஷ்டம சனி பாதிப்புகள்

அஷ்டம சனி நடக்கிறதென்றால் அந்த குடும்பத்தில் சிக்கல்களும், பிரச்சனைகளும் மாறி மாறி வந்து கொண்டுதான் இருக்கும். தேவை இல்லாமலே சண்டைகள் உருவா கும். உங்கள் உறவினர்கள் மூலமா க பல குழப்பங்கள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் வேலை செய்யும் இடங்களில் பிரச்சனை, வேலை இடமாற்றம், சிலருக்கு திடீரென வேலை பறிபோகுதல் இவ்வாறான நிலைமையும் உண்டாகும். சனி பிரீதி செய்து வந்தால் தீய பலன்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும்.

ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி பரிகாரங்கள்

எள் மற்றும் நல்லெண்ணெய் கலந்த சாதத்தை காக்கைக்கு வைத்து வணங்குவது நல்லது. காக்கைக்கு சாதம் வைப்பது நம் முன்னோர்களின் ஆசி கிடைப்ப தோடு, சனி பகவானின் வாகனம் என்பதால் அவரின் அருளும் கிடைக்கும்.சனி கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்வியாழன் மற்றும் சனி கிழமை தோறும் ஆஞ்சேநேயரை வழிபடவும்தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீ கால பைரவரை வழிபடவும்

வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வர

காஞ்சிபுரம் வழுக்கறுத்தீஸ்வரர் கோயிலில் திங்கட்கிழமை சென்று வழிபடவும்

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க , ஜாமக்கோள் பிரசன்னம் மூலமாக உங்கள் அணைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண.ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

May be an image of text that says 'ராகு லக்கினம் சந்திரன் சூரியன் செவ்வாய் ராசி 7 ஆகஸ்ட் 1983 4-30 AM அஷ்டமசனியால் அவதியுறும் ஜாதகர் புதன் சுக்கிரன் கேது குரு சனி'
5
29 Shares
Like
Comment
Share

No comments:

Post a Comment