Search This Blog

Showing posts with label திக் பலம். Show all posts
Showing posts with label திக் பலம். Show all posts

Tuesday, March 12, 2024

கிரஹங்கள் நிஷ் பலன் என்ன பலன் ? ஜெயலலிதா ஜாதகத்தில் சுக்கிரன் நிஷ் பலம் ...


கிரஹ நிஷ் பலம்

கோள்களின் வலிமை என்பதை அவை இருக்கும் வீடுகள், காரகத்துவங்கள், பார்வைகள், உச்சம், நீச்சம், நட்பு, பகை நிலைகள் ஆகிய நிலைகளை வைத்துமட்டும் தீர்மானித்து விடக்கூடாது.

ஒரு கோளின் வலிமையை, பல்வேறு கணிதங்களைச் செய்தே முடிவு செய்ய வேண்டும் என சோதிட நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஆறுவகை வலிமைகளைக் கண்டறிய வேண்டும் என கூறுகின்றன. அதனை வடமொழியில் சட்பலம் எனக் குறிப்பிடுகின்றன.



கிரகங்களின் ஆறுவிதமான பலங்கள்

(1) வீட்டினில் வலிமை (அ) ஸ்தான பலம்
(2) திசையினில் வலிமை (அ) திக் பலம்
(3) காலத்தில் வலிமை (அ) கால பலம்
(4) நகர்வில் வலிமை (அ) சேஷ்டா பலம்
(5) இயற்கையில் வலிமை (அ) நைசர்க்கிக பலம்
(6) பார்வையின் வலிமை (அ) திருக் பலம்

ஸ்தான பலம் – கோள்கள் வீட்டினில் பெறும் வலிமை

(1)உச்சம்
(2)மூலத் திரிகோணம்
(3) ஆட்சி
(4)நட்பு
(5)பகை
(6)கேந்திரம்
(7)திரிகோணம்
(8)பணபரம்
(9)ஆபோக்லிமம்

                              திக் பலம்

புதன்,குரு -கிழக்கிலும் -(அ) லக்னத்திலும்

சனி -மேற்கில் -(அ)7 ல்,

சந்திரன்,சுக்கிரன் -வடக்கிலும் -(அ) 4 லும், திக் பலம் உள்ளவர்கள் .

சூரியன்,செவ்வாய்,தெற்கிலும் -(அ)10 லும் திக் பலம் அடைவார்கள்



நிஷ் பலம்

நிஷ் பலம் என்பது கிரஹங்கள் வலுவிழந்த நிலையை குறிக்கும். ஒரு கிரகம் நீச்சம் அடைந்தால்  என்ன பலன் தருமோ அதே பலனை நிஷ் பலம்  பெற்ற கிரகம் தரும்.

குருவும் புதனும் நிஷ் பலம்

லக்கினத்தில் குரு பகவானும் புத பகவானும் திக் பலம் பெறுவார்கள். லக்கினத்தில் இருந்து 7ம் இடத்தில குருவும் புதனும் நிஷ் பலம் (வலுவிழந்த நிலையை)அடைவார்கள்.

புதன் நிஷ் பலம்

 நிஷ்பலம் அடைந்த கிரகம் ஆட்சியோ அல்லது உச்சமோ அடைந்தால் நிஷ் பலம் நீங்கி நன்மையான பலன்களையே தருவார்கள். உதாரணமாக மீன லக்கினத்திற்கு புதன் பகவான் 7ம் இடமான கன்னியில் அமையப்பெற்றால் நிஷ் பலம் அடைவார்.ஆனாலும் புதன் கன்னியில் ஆட்சி , உச்சம் , திரிகோணம் அடைவதால் புதன் வலுப்பெற்று பஞ்சமகா புருஷ யோகமான பத்திர யோகத்தை தருவார்.

சுக்கிரனும் , சந்திரனும் திக் பலம்

லக்கினத்தில் இருந்து 4ம் இடத்தில் சுக்கிரனும் , சந்திரனும் திக் பலம் அடைவார்கள். லக்கினத்தில் இருந்து 10 இடத்தில் அமைந்தால் சுக்கிரனும் சந்திரனும் நிஷ் பலம் (வலுவிழந்த நிலையை) அடைவார்கள். உதாரணத்திற்கு , கடக லக்கின ஜாதகருக்கு சுக்கிரனும் , சந்திரனும்  10ம் இடத்தில் அமைந்தால் நிஷ் பலம்  (வலுவிழந்த நிலையை) அடைவார்கள்.

சந்திரன்  பகல் 12 மணிக்கு 10ம் இடத்தில் நிஷ்  பலம் பெற்று காணப்படுவார். அதாவது உச்சி வெயிலில்  சந்திரன் மிகவும் பிரகாசமாக  இருக்க மாட்டார்.ஆனால் அதே சமயம் இரவு 12மணிக்கு  சந்திரன்  அதிகம் பிரகாசமாக . அப்பொழுது சந்திரன்  4ம் இடத்தில்  திக் பலம் அடைந்து காணப்படுவார். 



சனி நிஷ் பலம்

லக்கினத்தில் இருந்து 7ம் இடத்தில் சனி திக் பலம் அடைவார்.  லக்கினத்தில் சனி அமர்ந்தால் நிஷ் பலம் (வலுவிழந்த நிலையை) அடைவார்.

சூரியனும் செவ்வாயும் நிஷ் பலம்

லக்கினத்தில் இருந்து 10ம் இடத்தில் சூரியனும் செவ்வாயும் திக் பலம் அடைவார்கள். லக்கினத்தில்  இருந்து 4ம் இடத்தில அமர்ந்தால்  சூரியனும் செவ்வாயும் நிஷ் பலம் (வலுவிழந்த நிலையை) அடைவார்கள்.

சூரியன் பகல் 12 மணிக்கு 10ம் இடத்தில் திக் பலம் பெற்று காணப்படுவார். அதாவது உச்சி வெயிலில் சூரியன் மிகவும் பிரகாசமாக இருப்பார்.ஆனால் அதே சமயம் இரவு 12மணிக்கு சூரியனின் தாக்கம் அதிகம் இருக்காது. அப்பொழுது சூரியன் 4ம் இடத்தில் நிஷ்பலம் அடைகின்றார் .

ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நிஷ்பலம் அடையும் பொழுது அது ஆட்சி ,உச்சம் அல்லது மூலதிரிகோணம் என்ற நிலையை அடைந்திராது பொழுது அந்த கிரகம் ஜாதகருக்கு யோகப்பலன்களை குறைத்து கொடுப்பார் என்ற நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சுக்கிரன் நீச்சம்

மிதுன லக்கினத்திற்கு 4ம் இடமான கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சம் அடைவார் . ஆயினும் சுக்கிரன் 4ம் இடத்தில் மிதுன லக்கினத்திற்கு திக் பலம் பெறுவதால் யோகமான பலன்களை தருவார். அதாவது சுக்கிரன் நீச்சம் பங்கம் அடைந்து ராஜயோகத்தை  தருவார். மிதுன லக்கின 4ல் அமர்ந்த சுக்கிரன் சொத்து, வாகன யோகம் , மனைவி ,பெண் சுகம் , தாயாருக்கு மேன்மை போன்ற யோகப்பலன்களையே சுக்கிர பகவான் தருவார் என்பதை நாம் உணர வேண்டும். 

இதே சுக்கிர பகவான் மிதுன லக்கினத்திற்கு 10ம் இடத்தில் அதாவது மீனத்தில் உச்சம் பெற்று  அமர்ந்தால் , அவர் நிஷ்பலம் அடைவதால் யோகப்பலன்களை குறைத்து  கொடுப்பர்.



செல்வி ஜெயலலிதா ஜாதகம்.

உதாரணமாக செல்வி ஜெயலலிதா ஜாதகம். மிதுன லக்கினத்தில் பிறந்த ஜெயலலிதா ஜாதகத்தில் சுக்கிரன் 10 உச்சம் பெற்று அமர்ந்து உயர்தர மாளவ்ய யோகம் பெற்று காணப்பட்டாலும் , அவர் நிஷ்பலம் (வலுவிழந்த நிலையை) அடைந்ததால்  , அவர் முதல் அமைச்சர் ஆக இருந்தாலும் ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு தண்டனை பெற்றார் .

1991-1996 அதிமுக ஆட்சியின்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகால தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனால் அவர் முதல் பதவியை இழக்க நேரிட்டது.. சிறை செல்ல நேரிட்டது. நிஷ்பலம் அடைந்த சுக்கிரன் யோகத்தை கொடுத்து பின்னர் சுக்கிர பகவானே அதனை கெடுத்தார் என்பதை நாம் உணர  வேண்டும்.

உதாரணமாக துலா லக்கின ஜாதகத்தில் 2 மற்றும் 7க்கு உடைய செவ்வாய் 10 இடத்தில நீச்சம் பெற்று அமைந்தால் அவருக்கு நல்ல குடும்பம் அமையாது , உயர் கல்வி அமையாது , திருமண வாழ்கை சிறப்புற்று இருக்காது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் செவ்வாய் 10ம் இடத்தில் திக்பலம்  பெற்றதால் யோகமான வாழ்வே அமையும் . நல்ல வேலை  அல்லது தொழில் , அரசு வேலை , அதிகாரமிக்க வேலை , காவல் மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் நிலையை 10ல் திக்பலம் பெற்ற செவ்வாய் ( நீச்சம் அடைந்த செவ்வாய்) தருவார்.



இதே செவ்வாய் துலா லக்கின ஜாதகத்தில் 4 ல் உச்சம் பெற்று காணப்பட்டால் அவர் 4 ம் இடத்தில் நிஷ்பலம் பெரும் நிலையை அடைவதால் யோகப்பலன்களை ஜாதகருக்கு குறைத்து கொடுப்பார்.

ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நிஷ்பலம் அடையும் பொழுது அது ஆட்சி ,உச்சம் அல்லது மூலதிரிகோணம் என்ற நிலையை அடைந்திராது பொழுது அந்த கிரகம் ஜாதகருக்கு யோகப்பலன்களை குறைத்து கொடுப்பார்.

மிதுன லக்கினத்தில் பிறந்த ஜெயலலிதா ஜாதகத்தில் சுக்கிரன் 10 உச்சம் பெற்று அமர்ந்து உயர்தர மாளவ்ய யோகம் பெற்று காணப்பட்டாலும் , அவர் நிஷ்பலம் (வலுவிழந்த நிலையை) அடைந்ததால்  , அவர் முதல் அமைச்சர் ஆக இருந்தாலும் ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு தண்டனை பெற்றார் .


Monday, April 10, 2023

புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்தும் புதஆதித்ய யோகம்

 புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்தும் புதஆதித்ய யோகம்

புதன் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம். ஒரு ஜாதகத்தில் சூரியன்-புதன் சேர்க்கை நிகழும்போது அது புதஆதித்ய யோகத்தை உண்டாக்கும்.

ஜாதகர் கல்விகேள்விகளில் சிறந்தவர் ஆக இருப்பார் அவருடைய புத்திசாலித்தன த்தைப் பயன்படுத்தி பெயர் மற்றும் புகழைப் பெறுவார் இவரது பேச்சாற்றல் மிக்க பேச்சாள ராகவும் இருப்பர்.

ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்திருப்பது ஜாதகரை கண்ணியம் மிக்கவராகவும் , பிரபலமாகவும், பகுத்தறிவுள்ளவ ராகவும், உறுதியானவராகவும், உடல் ரீதியாகவும் கவர்ச்சி கரமானவராகவும் ஆக்குகிறது.

புதஆதித்ய யோகம் உள்ள ஜாதகர் அரசு அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளுடன் சுமுகமான உறவைப் கொண்டவர்கள் ஆவார்கள்.. அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் அதாவது நிபுணத்துவம் பெற்று இருப்பார்கள்.. இச்சேர்க்கை உள்ள ஜாதகரை கல்வியில் சிறந்தவராக்கும்.... மிகுந்த அறிவாற்றல் உள்ளவராகவும்.... மேலும் வெளிப்படையாக பேசக் கூடியவராக இருப்பார்..

கேந்திர ஸ்தானமான 7ல் தவிர, கேந்திரம்/திரிகோணம் (1,4,10) (1,5,9) மற்றும் 2வது மற்றும் 11வது வீடுகளிலும் இந்த சாதகமான பலன்களைத் ஜாதகருக்கு தருகிறது

1,4,8ல் புதஆதித்ய யோகம்அமைந்தால் ராஜ யோகம்

விளையும் புதன் சூரியன் விரும்பி 8,4,1 ல் அமையப் பெறின் மன்னவனாம் என்கிறது ஒரு ஜோதிட பாடல்.

புதன் லக்கினத்தில் இருந்தால் திக் பலம் பெறுவார். சூரியனுடன் இணைந்து லக்கினத்தில் அமைந் தால் மிக பெரிய யோகத்தை தருவார்.

லக்கினத்தில் புத ஆதித்ய யோகம் அமைய பெட்ரா ஜாதகரின் தொழில் வெற்றிக்கு சாதகமாக இருக்கும். ஜாதகர் மிகவும் புத்திசாலியாகவும், பல மொழிகள், தெரிந்தவர் ஆகவும் கல்வி, எழுத்து மற்றும் மக்கள் தொடர்பு போன்ற துறையில் ஒரு நிபுணராகவும் ஆக்குகிறது.

அலி கிரகம் -புதன்

கிரகங்களில் ஆணும் அல்லாத, பெண்ணும் அல்லாத அலி கிரகம் என்று புதனைச் சொல்வார்கள். அவர் தனித்திருக்கும் நிலையில் சுபராக இருப்பார். பிறருடன் இணையும் போது, அவர் சேரும் கிரகம் சுபராக இருந்தால் தன்னைச் சுபராகவும், அந்தக் கிரகம் பாபராக இருந்தால் தன்னை பாபராகவும் நிலைமாற்றிக் கொள்வார்.

நீச்சம் பங்கம் பெற்ற புதன்

ஒரு ஜாதகத்தில் புதன் நீச்ச நிலை பெற்று பங்கமாகி, நீச்ச பங்க நிலையில் மீனத்தில் இருந்தால் சில குறிப்பிட்ட நிலைகளில் அந்த நபருக்கு கல்வியில் தடை ஏற்பட்டு பள்ளியிறுதி வகுப்பு வரை மட்டுமே படிக்கும் வாய்ப்பு அமையும். அதே நேரத்தில் பஅவர், அனுபவ அறிவில் கல்லூரியில் படித்தவரை விட மேலான நிலையில் இருப்பார். சகல விஷயத்திலும் பாண்டித்யம் பெற்றிருப்பார். மேலும் கல்லூரியில் படிக்காத அவர் சரளமான ஆங்கில அறிவும், பிறமொழி அறிவும் கூட கொண்டிருப்பார்.



சூரியன் புதன் சேர்க்கை-புதிய கண்டுபிடிப்புகள்

புதஆதித்ய யோகம் உள்ள ஜாதகர் புதிய கண்டுபிடிப்புகளை உலகு க்கு அறிமுக படுத்துவார். தெலங்கானாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், செலவை மிச்சப்படுத்த புல்லட் வடிவில் ஒரு டிராக்டர் போன்ற வாகனத்தை பயன்படுத்துகிறார்.புல்லட்டின் பாடி, ஆட்டோவின் எஞ்சின், டிராக்டரின் வேலை என மூன்று திறன்களையும் ஒரு சேர பயன்படுத்தியிருக்கிறார் இந்த விவசாயி.

இங்கே இணைக்கப்பட்டுள்ள ஜாதகம் - ஜாதகர் புதிய விவசாய கருவிகளை கண்டுபிடுப்பதில் நிபுணர்

ஜாதகர் வயது 28 வயது. இவர் விவசாய கருவிகளை கண்டு பிடிப்பதில் நிபுணர். இவர் கண்டுபிடித்த புதிய விவசாய கண்டுபிடிப்புகள் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. நிறைய தேவை இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உள்ளது. இவருடைய ஜாதகத்தில் 11ல் புத ஆதித்ய யோகம் அமையப்பெற்று உள்ளது. 11ல் உள்ள புதனை குரு பார்ப்பது நுண்ணறிவு ஆற்றலை ஏற்படுத்தும்.

10ல் சுக்கிரன் , கேது அமர்வு

கடக லக்கினத்திற்கு சுக்கிரன் கேது 10ல் அமைந்து இருப்பதும் மற்றும் கடக லக்கினத்திற்கு யோககாரகன் செவ்வாய் 2ல் இருப்பதாலும் இவர் பிற்காலத்தில் தொழில் அதிபராக வருவதற்கு வாய்ய்பு உள்ளது. வெளிநாடுகளு க்கு ஏற்றுமதி செய்யும் யோகமும் உள்ளது

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

Sunday, January 29, 2023

செவ்வாய் 10ல் திக் பலம் பெற்றால் எந்த மாதிரியான யோகத்தை தருவார் ?

 செவ்வாய் 10ல் திக் பலம் பெற்றால் எந்த மாதிரியான யோகத்தை தருவார் ?

கிரஹ 6 வகை பலம்

ஜோதிடத்தில் ஸ்தான பலம், திக் பலம், திருக் பலம், கால, அயன, சேஷ்ட பலங்கள் என்ற ஆறு வகை பலங்களில் குறிப்படப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள ஜாதக பலங்களில் திக்பலம் என்பது வித்தியாசமான ஒன்று.

திக்பலம்

திக் பலம் என்பது ஒரு கிரகம் நிற்கும் திசையைக் குறிக்கிறது. இந்த பலத்தினை அடைந்த கிரகம் ஆட்சி வலுவில் நிற்பதற்கு ஒப்பா ன பலன்களைத் தரும்.

என்ன என்ன கிரஹங்கள் எந்த இடத்தில நின்றால் திக் பலம்

1.லக்னத்தில் குரு, புதனும்,

2.நான்கில் சந்திரன், சுக்கிரனும்,

3.ஏழில் சனியும்,

4.பத்தில் சூரியன், செவ்வாயும் திக்பலம் பெறுவார்கள்.

மறைமுக வலு

ஸ்தான பலம் எனப்படும் ஆட்சி, உச்சத்திற்கு நிகராகவும் அதற்கு அடுத்ததாகவும் சொல்லப்படும் இந்த திக்பலம் பாபக் கிரகங்க ளுக்கு மட்டுமே சிறப்பாகச் சொல் லப்பட்டது. இதுவே திக்பலத்தின் சூட்சுமம். பாபக் கிரகங்கள் ஒரு ஜாதகத்தில் நேரிடையாக ஆட்சி, உச்சம் போன்றவைகளை அடையாமல் மறைமுகமாக திக்பலத்தின் வழியாக வலுப் பெற்றால் இன்னும் நல்ல பலன்களைச் செய்யும்.

செவ்வாய் தசை- ஐஏஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ்

ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்து செவ்வாய் திசை ஒருவருக்கு நடந்தால் தைரியம் அதிகரிக்கும். சகோதரரால் நன்மைகள் நடக்கும். செவ்வாய் ரத்தத்திற்கு காரகம். சுபத்துவம் பெற்ற செவ்வாய் மருத்தவம், பொறியியல் படிக்க செவ்வாய் உதவி செய்வார். சீருடை அணியும் அதிகாரம் மிக்க பதவியை தருவார். ஐஏஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணியை தருவார். செவ்வாய் வலிமை குன்றியிருந் தால் சாதாரண போலீஸ் வேலை செய்வார்.

ஜாதகத்தில் அங்காரகர்

மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதி செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவார். கடகத்தில் நீச்சம் பெறுவார். சிம்மம் மற்றும் மகர ராசிக்கு செவ்வாய் யோகத் தை செய்யக் கூடிய கிரகம் ஆவார். செவ்வாய்க்கு உரிய எண் 9. செவ்வாய்க்கு உரிய தெய்வம் சுப்பிரமணியர்.ஒருவரது ஜாதகத்தில் சுப கிரகமாக இருந்து செவ்வாய் வலிமையாக இருந்து விட்டால்!... அந்த ஜாதகர் வெற்றி மேல் வெற்றியை குவிப்பார்.

கோடீஸ்வரர்

ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ அல்லது 1,4,9,10ஆம் வீடுகளில் அமர்ந்திருந்து தனது சுய வர்க்கத்திலும் 8 பரல்களைப் பெற்றிருந்தால் ஜாதகன் கோடீஸ் வரனாக உயர்வான். தன் திறமை மற்றும் செயல் ஆற்றும் தன்மை யால் பெரும் செல்வம் ஈட்டுவான்

தசம அங்காரஹா

செவ்வாய் பத்தாமிடத்தில் ஆட்சி பெறுவதை விட அங்கே திக்பலம் பெறுவதே நல்லது. இதைத்தான் நமது ஜாதக நூல்கள் “தசம அங்காரஹா” என்று கூறுகின்றன .துலா லக்கினத்திற்கு 10ம் இடமான கடகத்தில் நீசம் பெற்றாலும் செவ்வாய் அங்கே தன் திக்பலத்தால் உயர்தர யோகத்தை தருவார்

10ல் செவ்வாய் ஆட்சி, உச்சம் மற்றும் திக் பலம் - நன்மை தருமா ??

10ல் செவ்வாய் ஆட்சி, உச்சம் போன்ற நேர்வலுவினைப் பெற்று திக்பலமும் பெறுவது நல்ல நிலை அல்ல. இதுபோன்ற அமைப்பில் அவர் சந்திரனுடனோ, குருவுடனோ தொடர்பு கொள்ளும்போது மட்டுமே நன்மைகள் இருக்கும்.

10ல் செவ்வாய் திக்பலம்

நிர்வாக காரகனான செவ்வாய் 10-ல் அமைந்தால் திக்பலம் பெறுவா ர். அந்த ஜாதகர் சிறந்த நிர்வாகத் திறமையுடனிருப்பது மட்டுமின்றி, தன்னுடைய திறமையால் செய்யும் பணியில் படிப்படியாக உயர்ந்து சமுதயாத்தில் ஓர் உன்னதமான உயர்வினைப் பெறுவார். சுபகிரக மான குருவின் பார்வையானது செவ்வாய்க்கோ, 10-ஆம் வீட்டிற் கோ இருக்குமேயானால் நல்ல உத்தியோகம், கௌரவமான பதவிகள் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும் அல்லது செய்யும் தொழில் மேன்மை அடைவர்.

பலம் பெற்ற செவ்வாய்

நவகிரகங்களில் உத்தியோக காரகன் செவ்வாயாவார். செவ்வாய் பலம்பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, எந்தவொரு காரியத்திலும் திறம்பட செயல்பட்டு தீர்க்கமான முடிவெடுக்கும் ஆற்றல் இருக்கும். சொத்து, சுகம், புகழ் என அனைத்துமே ஜாதகருக்கு கிடைக்கப்பெறும்.

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க ஜாமக்கோள் ஆருடம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜாதகம் பார்க்க ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் என்னுடைய அலைபேசி மற்றும் whatsup No 7904719295