Search This Blog

Wednesday, May 31, 2017

கோச்சாரத்தில் குரு ஜென்ம ராசி , 3,4,6,8,10,12 ல் இருந்தால் ஏற்படும் கெடுபலன்கள்- Juptier in bad places during Transit

கோச்சாரத்தில் குரு ஜென்ம ராசி ,  3,4,6,8,10,12 ல்  இருந்தால் ஏற்படும் கெடுபலன்கள்

Guru Bhagavan

ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகம் வியாழன் என்றழைக்கப்படும் குரு. மெத்தப் படித்த மேதாவிகளை உருவாக்குபவர் இவர் தான். கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவரும் இவரே. ஆசி கூறுபவரின் நாவில் அமர்பவர் இவர். அப்பேற்பட்ட மகோன்னதமான குருவின் ஆசிர்வாதத்தைத் ;தான் குரு பலன் என்கிறோம்.

திருமணம் நடைபெறவேண்டுமென்றால் குரு பலம் முக்கியம்

ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்றும் சொல்கிறோம்.குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். நல்ல இடத்தில் திருமணம் முடியவேண்டுமெனில் இவருடைய ஆசி தேவை. குரு பார்க்க கோடி நன்மை என்பது மகா வாக்கியம். ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் நிச்சயமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும்.  தானாக பலம் கிடைத்து விடும்.

Thiruchendur Murugan


கோச்சாரத்தில் குரு ஜென்ம ராசி ,  3,4,6,8,10,12 ல்  இருந்தால் ஏற்படும் கெடுபலன்கள்


ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்
தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும்
இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும்
ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்
தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும்
சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும்
வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும்
என்பது பழம் பாடல்.


கோச்சாரத்தில் குரு ஜென்ம ராசியில் இருந்தால் ஏற்படும் கெடு பலன்கள்

ஜென்ம குரு

ஜென்மத்தில் குரு அமர்வது தீங்கு என்றே பலர் சொல்வார்கள். இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். இந்த ஜென்ம குரு நடக்கும் காலத்தில் புத்தி தடுமாற்றம், பாதை மாறிப் போதல் போன்றவை ஏற்படும்.    
.
 .மாறுபட்ட சிந்தனை, தீய எண்ணம் ஏற்படும். எனவே ஜென்ம குரு நடக்கும் காலக்கட்டத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜென்ம குரு நடக்கும்போது புத்தி வேலை .

உயிருக்கு உயிரான நண்பரின் இன்னொரு முகத்தை காண்பித்துக் கொடுப்பார், குரு. பொதுவாகவே ஒருவருக்கு ஜென்மத்தில் வரும் போது முகம் வாடும். எதையோ இழந்ததைப் போலவும், எல்லாம் இருந்தும் இல்லாததைப்போன்ற மனநிலை உண்டாகும். பொறுமையை சோதிப்பார். அதனாலேயே பதட்டமும் பயமும் கூடுதலாகவே இருக்கும்
.
அப்பொது என்னதான் செய்ய வேண்டும்? முன்பின் தெரியாதவர்களை நம்பி எதிலும் இறங்கி சிக்கிக் கொள்ளக் கூடாது. படாடோபம், பகட்டுத்தனம், ஆடம்பரப் பேச்சைத் தவிர்த்திட வேண்டும்.

ஜென்ம குருவில்  ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும் , அரச போகத்தை துறந்து வனவாசத்தை மேற்கொள்ளும்படி ஆனது.

ஜென்மத்தில் ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்’’ என்ற பாடல்படி கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. மனைவி ஏதேனும் குறைக் கூறினாலும் அதை அப்படியே மறந்து விடுவது நல்லது. அவருடன் எதிர்வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டாம்
.
Guru Bhagavan

மூன்றாம் வீட்டில்  குரு

குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு வேலைகளையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று, முறை முயன்று போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. அடுத்தடுத்து தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும்.

மூன்றாம் வீட்டில் குரு இருந்த பொழுது தான் துரியோதனனும் அவனது படையும் மாண்டார்கள் என்கிறது பாடல்.

நான்காம் வீட்டில்  குரு

"மன்னவன் நான்கில் நிற்க மலைபோல துயர் வந்தாலும் கண் எதிரில் பனியாய் மாறும் கல்வியால் வளர்ச்சி கூடும் முன்னாளில் இருந்த நோய்கள் முற்றிலும் விலகி ஓடும் பொன்னான ஒப்பந்தங்கள் போற்றும் விதம் வந்து சேரும் "

என்கிறது ஒரு ஜோதிட பாடல். நான்காம் வீட்டில்  குரு இருந்த பொழுதுதான் தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போன தாக சொல்லப்படுகிறது.

 ஆறாம் வீட்டில் வீட்டில்  குரு

"தேவகுரு ஆறில் வந்தால் தேவைகள் பூர்த்தியாகும் !ஆவல்கள் தீரவேண்டின் அனுசரிப்பும் தேவையாகும் !கோபத்தை விலக்கினாள் தான் குடும்பத்தில் அமைதி கூடும் !தீபத்தில் குருவை கண்டு தரிசித்தால் நன்மை சேரும் !" என்கிறது ஒரு ஜோதிட பாடல்.

குரு ஆறினில் இருப்பதால் உடல் நலம் பாதிக்கபடும் .எதிரிகளின் பலமும் சற்று கூடும் . கோபத்தை கட்டுபடுதவிடில் அவப்பெயர் உண்டாகும் .உடல் நலத்தில் கவனம் தேவை . சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும் குரு 6ல் இருந்த பொழுதுதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

Guru Bhagavan


எட்டாம் வீட்டில்  குரு

கோச்சாரத்தில் அஷ்டமஸ்தானமான எட்டாம் வீட்டில் குரு வரும் பொழுது ஜாதகருக்கு மன உளைச்சல் , கடன் தொல்லை , நிம்மதின்மை போன்றவை ஏற்படும். உயர் பதவியில் உள்ளவர்கள் தங்கள் பதவியை இழக்க நேரிடும்.


கோச்சாரத்தில் பத்தாம் வீட்டில் குரு

கோச்சாரத்தில் பத்தாம் வீட்டில் குரு யிருந்தால் பதவி பாழ் என்று சொல்வார்கள் பல பிரதமந்திரிகள் , முதலமைச்சர்கள் , மந்திரிகள் குரு பதில் வரும் பொழுது அவர்களுடைய பதவி பறிபோகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஈசனே குரு பத்தில் வந்தபொழுது தலையோட்டிலே இரந்துண்ட நிலை ஏற்பட்டது என்று மேல கூறிய ஜோதிட பாடல் எடுத்து கூறுகிறது.

Guru Bhagavan


கோச்சாரத்தில் பன்னிரெண்டாம் வீட்டில் குரு

12 ஆம் பாவமான விரையம் மோட்சம் வெளிநாட்டு பயணம் சொந்த வீடு தூக்கம் போகம் ஆகிய காரகத்துவங்களை குறிப்பிடும் இடம் ஆகும்..பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலை ஏற்படும். ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும் என்று மேல கூறிய ஜோதிட பாடல் எடுத்து கூறுகிறது.

குரு பகவான் தரும் சகட யோகம்

சகடை யோகம் என்றால் வண்டிச் சக்கரம் போல் வாழ்கை அமைந்து விடும். என்பர்கள் .குரு நின்ற வீட்டிற்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் ஏற்படும்.சகட யோகம் என்றால் வண்டிச்சக்கரம். .சக்கரம் போல வாழ்வில் ஏற்றம் இறக்கம் ஜாதகருக்கு பலன் ஏற்படும்...


யரசரனின்றவதற்கிள மதியெட்டாகில் வஞ்சியே
 
செல்வங்குன்றி வகுத்த மந்தயோகந்தப்பும்

குருவுக்கு எட்டில் சந்திரன் இருப்பின் ஜாதகருக்கு பலவித துண்பங்கள் ஏற்படும்.

   ………பொன்னுமம் புலிக்காறெட்டாகில்

எந்த நாளாகி லுந்தானிவனுக்கே யோக மில்லை

அகடி மன்னனுக் காறெட்டொடு
விதிகடிலாமதி எய்தியிருந்திடின்
சகடயோகமிதிற் தார்க்கெலாம்
விகட துன்பம் விறையு மரிட்டமே !

சீரே நீ குருவுக்கு வியமாரெட்டில்
     செழு மதியுமதிலிருக்க சகட யோகம்
ஆரே நீ அமடு பயம் பொருளும் நஷ்டம்
     
           

குருவுக்கு 6-8-12-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் பயம், பொருள் சேதம், நஷ்டம் ஏற்படும்.

யாரடா தம்பி கோளய் ஆரானுக்கு கீரார் எட்டில்
பாரடா நிலவு நிற்க பயனிலா சகடயோகம்
கூறடா அழியும் செல்வம் குலப்புகழ் உற்றார்
                       பெற்றொர் வேறடா வெறுப்பர் துண்பம் வேரூன்றும் வாழ்
                               நாளெல்லாம் கதித்ததோர் ஆறெட்டாகில் கடினமாய் பலன் அற்பம்

குருவுக்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகமகும்.செல்வம், புகழ், குலப்புகழ், உற்றார், உறவினர்கள், பெற்றோர், அனைவரும் வெறுப்பர்
வாழ்நாளில் துண்பத்தை அனுபவிப்பார்கள்.  லக்கினத்திற்கு 6-8ல் அதிக துண்பம் தரும்.
Guru Bhagavan

கோச்சார ரீதியாக குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2,5,7,9,11ல் இருக்கும் பொழுது ஏற்படும் நற்பலன்கள்

பெரு பதினொன்று ஐந்து ஏழு

பேர் ஒன்பதாம் இரண்டில் தேவ குரு

வரின் செல்வம் சீர் குதிரை

வெண்குடை தீவர்த்தி

தருமம் தானமும் உண்டு

தாய் தந்தை துணையுமுண்டு

அருமையும் பெருமையும் உண்டாம்

அரசர் பரிசும் பாராட்டும் உண்டாம்..

5 ம் இடத்தில் வீட்டில்  குரு

"ஐந்தினில் குருதான் வந்தால் அனைத்திலும் வெற்றி கிட்டும் !
பைதனில்  பணமும்  சேரும்!பாராளும் யோகம் வாய்க்கும் !
வையகம் போற்றும் வண்ணம் வாழ்க்கையும் அமையும் உண்மை !செய்தொழில் வளர்ச்சி யாகும் !செல்வாக்கும் அதிகரிக்கும் !" 

Guru Bhagavan

குரு பகவானை வழிபட கூடிய ஆலயங்கள்

குருவுக்கு உரிய ஸ்தலமாக திருச்செந்தூரும், கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடியும் சிறப்பாகக் கூறப்படுகிறது. மேலும் நெல்லை மாவட்டம் செங்கோட்டை புறநகரில் புளியறையிலும், காரைக்குடி திருப்பத்தூர் அருகில் (9 கி.மீ) பட்டமங்கலத்திலும் தட்சிணாமூர்த்தி சந்நிதி தனிச் சந்நிதியாக (வலம் வரும் அளவு) அமைந்திருக்கிறது. இதேபோல தஞ்சாவூர் அருகில் தென்குடித் திட்டை என்ற ஊரிலும் குரு பகவான் (வியாழன்) தனிச் சந்நிதியில் காட்சியளிக்கிறார். திருச்சி அருகில் பழூர் சிவாலயத்தில் நவ கிரகங்களும் தம்பதி சகிதம் எழுந்தருளியிருக்கிறார்கள். அதில் குருவும் தமது பத்தினி தாராவுடன் அருள் புரிகிறார்.

மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் போகும் பாதையில் (அவுட்டர்) வள்ளலார் கோவில் என்ற இடத்தில் உள்ள சிவாலயத்தில் மேதா தட்சிணாமூர்த்தி நந்தி வாகனத்தில் காட்சியளிக்கிறார். கும்பகோணம், ஆடுதுறை அருகில் சூரியனார் கோவிலில், சூரியனுக்கு எதிரில் குரு எழுந்தருளியுள்ளார். சென்னைக்கு அருகில் தற்போது பாடி என்று அழைக்கப்படும் திருவலிதாயத்திலும், மயிலாடுதுறை பேரளம் பூந்தோட்டம் அருகில் திருவீழிமிழலையிலும், வேலூர் சங்கரன் பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் ஸ்ரீ யோக தட்சிணா மூர்த்தியாகவும்,
சென்னை-திருப்பதி சாலையில் 40 கி.மீ. தூரம் ஊத்துக்கோட்டை என்ற ஊரில் அம்பாளை மடியில் இருத்தியபடி தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாகவும் அருள்புரிகிற. புதுக்கோட்டை யிலிருந்து அறந்தாங்கி போகும் பாதையில் ஆலங்குடி என்ற ஊரில் தட்சிணாமூர்த்திக்கு குருப் பெயர்ச்சி ஹோமம், சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்படுகிறது

. மதுரை அருகில் குருவித்துறையிலும் (வைகைக் கரையில் உள்ள பெருமாள் கோவில் அருகில்) குருவுக்கு ஹோமம், அபிஷேகம், பூஜை செய்யப்படுகிறது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் குச்சனூர் ஆதீனம் ராஜயோகம் தரும் வட குரு பகவான் ஸ்தலத்தில் குரு யானை வாகனத்தில் காட்சியளிக்கிறார். இங்கும் குருப் பெயர்ச்சி விழா நடக்கிறது.

No comments:

Post a Comment