சந்திராஷ்டமம் என்றால் என்ன?
ஒரு ராசியில் சந்திரன் இரண்டேகால் நாள்கள் இருப்பார் . ஒருவருடைய ராசிக்கு 8-ம்
ராசியில் சந்திரன் இருந்தால், அவருக்கு அன்று சந்திராஷ்டம நாள் என்று தெரிந்துகொள்ளலாம்.
சந்திரன் மனோகாரகன் என்பதால், சந்திரன் 8-ல்
மறைந்திருக்கும் காரணத்தால், ஜாதகரின் மனம் சந்திராஷ்டம நாள்களில் மிகுந்த குழப்பமான நிலையில்
காணப்படும். எனவே அந்த நாள்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதுடன், வழக்கமான பணிகளையும்
கூடுதல் கவனத்துடன் செய்யவேண்டியது அவசியமாகிறது.
சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள்
ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திராஷ்டமம்த்தில்
தவிர்க்க வேண்டிய காரியங்கள்
ஒருவர் பிறந்த ராசிக்கு,
8 - வது ராசியில் அமையும் நட்சத்திரங்கள்
சந்திராஷ்டமம் உள்ளவை. அந்த நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைப்பதைத் தவிர்க்க
வேண்டும். புதிய
காரியங்கள் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
சந்திராஷ்டம நாள்களில் தொடங்கும் காரியங்கள் பிரச்னைகளைத்
தருவதுடன், காரிய வெற்றியையும் தருவதில்லை.. எனவே, முக்கியமான காரியங்களுக்கு நாள் பார்க்கும்போது, தன்னுடைய
ராசிக்கு சந்திராஷ்டம நாளா என்று பார்ப்பது அவசியம். திருமணத்தின்போதும் மணமக்கள்
இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்ப்பதும் மிகவும்
அவசியம்.
பால் காய்ச்சுதல், கிரகப்
பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து
விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய
பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களை யும் பேச
மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில
மாற்றங்கள் உண்டாகின்றன.
எந்த ஜென்ம
ராசிக்கு எந்த ராசி சந்திராஷ்டம ராசி
ஜென்ம ராசி
|
சந்திராஷ்டம ராசி
|
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு
|
சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் இரண்டேகால்
நாள்கள்
|
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு
|
சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் இரண்டேகால்
நாள்கள்
|
மிதுன ராசியில்
பிறந்தவர்களுக்கு
|
சந்திரன் மகர ராசியில் சஞ்சரிக்கும்
இரண்டேகால் நாள்கள்
|
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு
|
சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும்
இரண்டேகால் நாள்கள்
|
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு
|
சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கும்
இரண்டேகால் நாள்கள்
|
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு
|
சந்திரன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும்
இரண்டேகால் நாள்கள்
|
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு
|
சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும்
இரண்டேகால் நாள்கள்
|
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு
|
சந்திரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும்
இரண்டேகால் நாள்கள்
|
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு
|
சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கும்
இரண்டேகால் நாள்கள்
|
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு
|
சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் இரண்டேகால்
நாள்கள்
|
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு
|
சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும்
இரண்டேகால் நாள்கள்
|
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு
|
சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் இரண்டேகால்
நாள்கள்
|
நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு
வரும்போது என்னென்ன பலன்கள்
ஏற்படும்?
சந்திரன்
நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது:
|
சிந்தனை
அதிகரிக்கும் மனம் அலை பாயும்,.
ஞாபக மறதி உண்டாகலாம்
|
இரண்டாம் இடத்தில் இருக்கும்போது:
|
.பேச்சில் நளினமிருக்கும்.
கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.பணவரவுக்கு வாய்ப்புண்டு.
|
மூன்றாம் இடத்தில் இருக்கும்போது
|
சகோதர
ஆதரவு, சமயோசிதமாக
செயல்படுதல், அவசிய செலவுகள்
|
நான்காம் இடத்தில் இருக்கும்போது
|
தாய்வழி ஆதரவு, .பயணங்கள், உற்சாகம், மனமகிழ்ச்சி
|
ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது
|
தெளிந்த
மனம், தாய் மாமன் ஆதரவு.
தெய்வ பக்தி, ஆன்மிக
பயணங்கள், நல்ல
எண்ணங்கள்,.
|
ஆறாம் இடத்தில் இருக்கும்போது:
|
எரிச்சல், கோபதாபங்கள், டென்ஷன். மறதி, நஷ்டங்கள், வீண் விரயங்கள்.
|
ஏழாம் இடத்தில் இருக்கும்போது
|
மகிழ்ச்சி,.பயணங்கள், காதல்
நளினங்கள், குதூகலம்.
பெண்களால் லாபம், சுற்றுலாக்கள்,
|
எட்டாம் இடத்தில் இருக்கும்போது:
|
இந்நாளில் மௌனம் காத்தல்
நல்லது. தியானம் மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.
|
ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது
|
ஆலய
தரிசனம், சுபசெய்தி, காரிய வெற்றி
|
பத்தாம் இடத்தில் இருக்கும்போது
|
அலைச்சல், நிறை-குறைகள், பயணங்கள், உடல்
உபாதைகள்,.பண
வரவு,
|
பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது
|
மன அமைதி,.தரும
சிந்தனை தொட்டது துலங்கும், மூத்த சகோதரரால் உதவி, பொருள் சேர்க்கை
|
பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது
|
டென்ஷன், இழப்பு, வீண்
விரயங்கள், கைப்பொருள்
உடல் உபாதைகள் , மறதி,
|
சந்திரன்தான் எல்லாவற்றிற்கும் உரியவன். மனசுக்கு உரியவன்.
செயல்பாடுகளை கட்டுப்படுத்துபவன். எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது எதிர்மறையான
செயல்கள் அதிகரிக்கும்.
அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது பொறுமையை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.
அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது பொறுமையை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.
Nice ....
ReplyDelete