ஓடி போன என் மகன் திரும்ப
வீட்டிற்கு வருவானா ? ஒரு பாசம் மிகுந்த தாயின் அழுகை
மறைந்த ஜோதிட மாமேதையும் என் குருநாதருமான முருகு ராஜேந்திரன்
நானும் என்குருநாதர் மறைந்த முருகு ராஜேந்திரன் அவர்களும் பல
வருடங்களுக்கு முன் மலேஷியாவில் நடை
பெற்ற ஜோதிட மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மலேஷியா சென்றோம் . மலேஷியா ஜோதிட மாநாடு திரு முருகு ராஜேந்திரன்
மீது பக்தி வைத்து இருந்த மலேஷியா ஜோதிடரால் நடத்தப்பட்டது. மலேஷியா ஜோதிட மாநாடு
அப்போது மலேஷியா மந்திரி ஆக இருந்த டுத்தோ சாமிவேலு அவர்கள் தலைமை தாங்கினார்.
அவரின் மனைவி இந்திராணி அவர்களும் பங்கேற்றார்கள்.
நாங்கள் இருவரும் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக மலேஷியாவில் தங்கியிருந்தோம்.
மலேஷியா தமிழ் டிவியில் , வானொலியிலும்
பேசினோம். பல மலேஷியா ஊர்களில் உள்ள
கோயில்களுக்கு சென்று ஜோதிடம் பற்றி உரையாற்றினோம். மலேஷியா தமிழ் அன்பர்கள்
மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் எங்களுக்கு பெரும் ஆதரவு தந்ததை இன்னும் அழியா நினைவாக உள்ளது.
திரு முருகு ராஜேந்திரன் சென்னையில் மிக பிரமாண்ட அளவில் குரு பெயர்ச்சி
மற்றும் சனி பெயர்ச்சி யாகங்கள் செய்து வந்தார். அப்பொழுது ஜோதிட மாநாடு மற்றும்
பட்டிமன்றங்கள் நடத்துவார். பிரபல ஜோதிடர்கள் கலந்துகொண்டு தங்களுடைய ஜோதிட
அறிவாற்றலை வெளிப்படுத்துவார்கள்.
பினாங்கில் உள்ள முருகன் கோவிலில் நாங்கள் ஜோதிட சாஸ்திரத்தை பற்றி
உரையாடினோம். அங்கு வந்திருந்த ஒரு பெண்மணி தன்னுடைய மகன் ஜாதகத்தை திரு முருகு
ராஜேந்தரேனிடம் காண்பித்து பலன் சொல்ல சொன்னார்.
திரு முருகு ராஜேந்திரன் அவர்கள் அந்த பெண்ணிடம் வீட்டை விட்டு ஓடிப்போன உன்
மகனை பற்றிதானே கேள்வி என்றார். அவ்வளவுதான் , அந்த பெண் அவர் காலில் விழுந்து அழ ஆரம்பித்து
விட்டார். என் மகன் நான்
கோபத்தில் எதோ திட்ட , அதன் காரணமாக ஆறு
வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளிய போனவன் இன்றலுவும் வீடு திரும்ப வில்லை
என்று அழுது கொண்டே கூறினார்.
திரு முருகு ராஜேந்திரன் அவர்கள் உங்கள் மகனுக்கு ஏழரை சனி நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. மேலுiம் 9ல் குரு இருப்பதால் , உன் மகன் வீட்டை விட்டு ஓடி விட்டான். இன்னும் இரண்டு வருடங்களில் நிச்சயமாக
திரும்பி வருவான் என்று கூறினார்.
ஓடிப்போனவனுக்கு 9ல் குரு
வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான்
ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல
நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது.
குடும்பமும் நல்ல
முறையில் இருக்கும்.
ஜாதகத்தில் குரு
ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ
வேண்டிய சூழ்நிலை வராது.
ஓடிப்போனவனுக்கு 9ல் குரு என்பது
ஜாதகத்தில் 9ம் இடத்தில் (பாக்கிய ஸ்தானத்தில்) குரு அமையப்பெற்றவர்கள் தங்கள் சிறு வயதில் பெற்றோர்களிடம்
கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள். பின்னர் தன்னுடைய சுய
முயற்சியால் வாழ்வில் பெரிய நிலைக்கு வருவார்கள் . பெற்றோர்களே வியக்கும் வண்ணம்
அவர்களின் வளர்ச்சி அமையும்.
“"அகப்பட்டவனுக்கு அட்டமத்துச்சனி. ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்துக்கு குரு' என்பார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு அரண்மனையில் இருவர் திருடப் போனார்களாம். காவலாளிகலிடம். மாட்டிக்கொண்டு
விட்டார்கள் அதில் ஒருவன் காவலாளிகலிடம்
அகப்பட்டுவிட்டான். . மற்றவன் தப்பி ஓடி விட்டான் தப்பி ஓடியவனுக்கு 9ல் குரு இருந்ததாம் என்று சொல்வார்கள்
அதாவது ஒன்பதில் குரு இருக்கும்போது தவறு செய்தாலும்
தண்டனையில் இருந்து தப்பிவிடலாம் என்பது இதற்கு
அர்த்தம்.
9-ல் குரு இருந்தால் குருவருளும் திருவருளும் உருவாகும்.
புலிப்பாணி
சொல்லும் வீட்டை விட்டு ஓடி பின்னர் வீடு திரும்பும் கிரஹ நிலைகள்
பாரப்பா ஈராறோன் இருநான்கோனும்
பகருகின்ற செவ்வாயும் மூவர்சேர்ந்து
கூறப்பா யெவ்விடத்தில் கூடிட்டாலும்
கொற்றவனே பரதேசம் போவான் காளை
சீரேனீ சுந்திரனும் கண்ணுற்றாலும்
சிலகாலந் தங்கிருந்து செம்பொன்தேடி
ஆரப்பா அவன் பதியில் வந்துவாழ்வன்
அப்பனே புலிப்பாணி அரைந்திட்டேனே
|
இன்னுமொரு விஷயத்தையும் சொல்லுகிறேன் நன்கு விளக்கமாக இதனையும் நீ கேட்பாயாக! 12க்குடையவனும் எட்டுக்குடையோனும் சேர்ந்து செவ்வாயுடன் மூவரும் சேர்ந்து எந்த இடத்தில் கூடிநின்றாலும் அவன் பரதேசம் செல்வான். இவர்களைச் சந்திரன் கண்ணுற்றாலும் சில காலம் அங்கே தங்கியிருந்து வெகுதனம் தேடி மீண்டும் அவனது சுயதேசத்தில் வந்து வாழ்வான் என போகமா முனிவரது பேரருட் கரணையால் புலிப்பாணி கூறினேன்.
8க்குடையவன் 12க்குடையவன் செவ்வாய் ஆகிய மூவரும் எந்த இடத்தில்
கூடி நின்றாலும் அந்த ஜாதகன் அன்னிய தேசம் செல்வான். அதே சமயத்தில் இவர்களை சந்திரன் பார்த்தால் சில காலம்
வெளிநாட்டில் அதிக பணம் ஈட்டி பின்னர் சொந்த தேசத்திற்கு வந்து சுகமுடன் வாழ்வான்.
கார்த்த
வீர்யார்ஜுன மந்திரம்
காணாமல் போனவர்களையும் , காணாமல் போன பொருள்களையும்
திரும்ப வரவழைக்க , சொல்ல வேண்டிய கார்த்த வீர்யார்ஜுன மந்திரம்.
கீழ் கண்ட மந்திரத்தை
தினமும் 108 அல்லது 1008 தடவை ஒரு மண்டலம் அதாவது நாட்கள் சொல்லி வர , காணாம போனவர்கள் கட்டாயமாக
தன்னுடைய வீட்டிற்கு திரும்ப வருவார்கள் அல்லது காணாமல் போன பொருள் கண்டிப்பாக
கிடைக்கும்.
கார்த்த
வீர்யார்ஜுன நாம ராஜா பாஹூ ஸகஸ்ரவான்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண (------------------)
கதம் நஷ்டம்ச லப்யதே..
தஸ்ய ஸ்மரண மாத்ரேண (------------------)
கதம் நஷ்டம்ச லப்யதே..
மந்திரத்தில் (-----------------) இவ்வாறு கோடிட்ட இடமான
இந்த இடத்தில், நீங்கள் காணாமல் போனவர்களை அல்லது தொலைந்து போன
பொருளை சொல்லவும். இதன் மூலம் காணாமல் போன பொருள் மற்றும் காணாமல் போனவர்களை கண்டிப்பாக
திரும்ப வரவழைக்கலாம்.
No comments:
Post a Comment