Search This Blog

Saturday, May 27, 2017

திரு ஸ்டாலின் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் ஆவாரா? திரு ஸ்டாலின் ஜாதகம் என்ன சொல்கிறது? Will Mr M K Stalin become Next Chief Minister of Tamilnadu ?

திரு ஸ்டாலின் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் ஆவாரா?

திரு ஸ்டாலின்  ஜாதகம் என்ன சொல்கிறது?

M K Stalin Jathagam


திரு ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் தலை சிறந்த அரசியல் தலைவர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. . 2009 to 2011 காலகட்டத்தில் அவர் தமிழ் நாட்டின் துணை முதல் அமைச்சராக இருந்தவர். 1996 to 2002 வரை சென்னை நகர மேயர் ஆக இருந்தவர். அவர் சென்னை மேயர் ஆக இருந்த பொழுது சென்னை நகர வளர்ச்சிக்காக பல தொலை நோக்கு  திட்டங்களை வெற்றிகரமாக செயல் படுத்தியவர். தி மு கவின் பொருளாராகவும் இருந்து வருகிறார் . தற்சமயம் தி மு கவின் செயல் தலைவராக உள்ளார். மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டு பல துன்பங்களை சந்தித்தவர். தனது அரசியில் வாழ்க்கையை 14 வயதிலே தொடங்கியவர்.

திரு ஸ்டாலின் சரியான பிறந்த நேரம் தெரியாததால் , அவருடைய தற்சமய நடப்பு தசை மற்றும் புக்தியை கணிக்க முடிய வில்லை.

திரு ஸ்டாலின் ஜாதகம்



புதன்
சுக்கிரன்
செவ்வாய்


குரு




லக்கினம்
சூரியன்


திரு M K ஸ்டாலின் ஜாதகம்

Date of Birth -1st March 1953

ராசி சக்ரம்
கேது


ராகு

சந்திரன்






சனி



M K Stalin Jathagam

வலுவான கிரஹ நிலைகள்

திரு ஸ்டாலின் ஜாதகத்தில் , லக்கினத்தில் சூரியன் பலமுடன் காணப்படுகிறார். ஆட்சியாளர்களை உருவாக்குபவர் . சூரியனின் அருளின்றி எவரும் அரசியலிலோ அல்லது ஆட்சிக்கோ வரமுடியாது. லக்கினத்தில் சூரியன் இருந்தால் : ஜாதகன் கோபக்காரர். அதீத துணிச்சல் உடையவனாக இருப்பார். தங்களைப் பற்றிய உயர்வு மனப்பானமை இருக்கும். . இரக்கசிந்தனை. பொறுமையுணர்வும். மிக்கவர். செல்வந்தவர்களாவும், தனித்தன்மை உடையவர்களாகவும், புகழ் பெற்றும் விளங்குவார்கள். சூரியன் லக்கினத்தில் பலமுடன் காணப்படுவதால் , அவர் தனது விசுவாசிகளை சரியாக அடையாளங்காணுவார் மற்றும் பல நேரங்களில்  உறுதியான மற்றும் துணிச்சலான நடவடிக்கை எடுக்க கூடிய துணிச்சல் மிக்கவராக விளங்குவர்.

கும்ப லக்கினத்திற்கு யோககாரகரான சுக்கிரன் தன ஸ்தானத்தில் ( 2ம் வீட்டில்) உச்சம் பெற்று காணப்படுவது சிறப்பு.
M K Stalin Jathagam


சச யோகம்

லக்கினாதிபதியான சனி 9ம் இடத்தில் உச்சம் பெற்று காணப்படுகிறார். அதனால் ஸ்டாலின் ஜாதகத்தில் சச யோகம் உள்ளது. ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் ஆட்சி(சொந்த வீட்டில்), உச்சம் பெற்று அமர்ந்தால் சச யோகம் ஏற்படும்,ஜென்ம லக்னத்திற்கு திரிகோண கேந்திரங்களில் ஆட்சி பெறும் சனி பகவான் சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து அமராமல்யிருப்பதால் திரு ஸ்டாலின் அவர்களுக்கு உயர்தரமான சச யோகம் அமையப்பெற்றுள்ளது .

உயர் தர சச யோகம் உள்ளதால் , தி மு க வில் பலரை பின் தள்ளி தலைமை பதவிக்கு ஸ்டாலினால் வர முடிந்தது. சச யோகம் யோகத்தினால் தலைமை பொறுப்புகளில் உயர்வதுபொது மரியாதையை,கடும் உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கும் புகழுக்கும் , வருகின்ற நிலை திரு ஸ்டாலினுக்கு ஏற்பட்டது.

M K Stalin Jathagam


குரு சந்திர யோகம்

குரு பகவான் தனது 5ம் பார்வையாக சிம்மத்தில் யுள்ள சந்திரனை பார்ப்பது குரு சந்திர யோகத்தை ஏற்படுத்தியுள்ளது . குருவும்- சந்திரனும் ராசியில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் குரு - சந்திர  யோகம் உண்டாகிறது. . இதன் மூலம் உயர்ந்த கல்வி, சாதனை படைக்கும் ஆற்றல் ஏற்படும்
.
கேந்திர திரிகோண ஸ்தானாதிபதி சேர்க்கை யோகம்

கேந்திர ஸ்தானாதிபதியும் திரிகோண ஸ்தானாதிபதியும் இணைந்து இருப்பதே ராஜ யோகத்தை தரும்.  திரு ஸ்டாலின் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் ஆகியவர்கள் கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதி ஆவார்கள். புதன் திரிகோண ஸ்தானத்திற்கு அதிபதி ஆவார். இவர்கள் இணைந்து குடும்ப , வாக்கு , கல்வி , ஸ்தானமான 2ம் வீட்டில் அமர்ந்து இருப்பது உயர்தரமான யோகத்தை தருகிறது. இந்த கிரஹ சேர்க்கை  திரு ஸ்டாலின் அவர்களை ஒரு நிகரில்லா தலைவரை ஆக்கும்.
M K Stalin Jathagam


பரிவர்த்தனை யோகம்

பரிவர்த்தனை யோகம் இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது (interchange of places) பரிவர்த்தனை யோகம் ஆகும்! இந்த யோகத்தால் இடம் மாறி அமர்ந்த கிரகங்களின் சக்தியும்/வலிமையும் அதிகமாகும்.அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அந்தப் பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும்.

திரு ஸ்டாலின் ஜாதகத்தில் 2 ம் மற்றும் 10 ம் அதிபதியான குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை அடைந்து காணப்படுவதால் மிக உயர் தரமான ராஜ யோகத்தை தருகிறது.  இந்த பரிவர்த்தனை யோகம் திரு ஸ்டாலினுக்கு பொறுமையும் , நிதானத்தையும் , மக்கள் செல்வாக்கும் , மக்களுக்கு சேவை செய்யும் மனோபாவத்தை அளிக்கும். இந்த பரிவர்த்தனை யோகம் திரு ஸ்டாலினுக்கு அரசியல் சூழ்ச்சிகளை  அறிந்து விவேகமாய் நடந்து கொள்ளும் திறமையும் மற்றும் அரசியலில் காய்களை நகர்த்தும் திறமையும் அளிக்கும்.

உச்சம் பெற்ற சனியை பார்க்கும் குரு
குரு பகவான் உச்சம் பெற்ற சனி பகவானை  பார்ப்பது திரு ஸ்டாலினுக்கு நுண்ணறிவாற்றலியும்  , சமயோசித புத்தியும் அளிக்கிறது.  இதனால் , திரு ஸ்டாலின் அவர்கள் கட்சியை கட்டுகோப்பாக வைத்து கொள்ளவும் , மக்களின் தேவைகளை  பூர்த்தி செய்யும் ஆற்றலையும் தருகிறது.


தர்ம கர்மாதிபதி யோகம்

9க்கும் 10க்கும் அதிபதிகள் ஒன்று கூடுவதோ அல்லது பார்ப்பதோ அல்லது பரிவர்த்தனமோ உண்டெனில், இந்த யோகமாகும். திரு ஸ்டாலின் ஜாதகத்தில் 9 ம் அதிபதியான சுக்கிரனும் 10ம் அதிபதியான செவ்வாயு இல் 2ம் இடத்தில இணைந்து காணப்படுகிறார்கள். தர்ம கர்மாதிபதி யோகம் உள்ளவர்களுக்கு  அரசியலில் உயர்ந்த பதவி உயர்ந்த பதவி வகிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும். இந்த யோகம் , திரு ஸ்டாலினுக்கு தமிழக முதலமைச்சர் ஆகும் வாய்ப்பை கண்டிப்பாக ஏற்படுத்தி தரும்.

வேசி யோகம்

சூரியனுக்கு  இரண்டாம் இடத்தில் ராகு , கேது மற்றும் சந்திரன் தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது. இந்த யோகம் அமைந்த காரணாத்தால் ,திரு ஸ்டாலின் அதிர்ஷடக்காரர் , நினைத்ததை முடிக்கக்கூடியவர்.

பாச யோகம்

ராகு கேதுவை தவிர்த்து மற்ற  கிரஹங்கள் ஏதாவது 5 ராசிகளில் சஞ்சரிப்பது. ஜாதகர் நேர்மையான வழியில் செல்வம்ஈட்டுவராகவும் நீதி நெறிகளை பின்பற்றுவராகவும் இருப்பர்.

அகண்டசாம்ராஜ்யயோகம்

2ம் 5ம் அதிபதிகள் சந்திரனுக்கோ அல்லது லக்கினத்திற்கோ வலுவாக உள்ள நிலை. சாதாரண தொண்டனாக இருந்து பெரும் தலைவராக ஆகும் தன்மை. திரு ஸ்டாலின் ஜாதகத்தில் 2 ம் அதிபதியான குருவும் , 5ம் அதிபதியான புதனும் லக்கினம் மற்றும் சந்திரனுக்கு வலுவான நிலையில் உள்ளனர்.
தேனு யோகம்

ஜாதகத்தில் 2ம் அதிபதியை சுபர் பார்வையிட்டாலும் சேர்க்கை பெற்றாலும். திரு ஸ்டாலின் ஜாதகத்தில் 2 ம் அதிபதியான குருவை லக்கினாதிபதியானா சனி 7ம் பார்வையாக பார்வையிடுதல். இந்த யோகத்தால் திரு ஸ்டாலின் அவர்களுக்கு நல்ல பேச்சாற்றல்  , நல்ல அறிவாற்றல் ஆகியவற்றை தந்துள்ளது.

விரின்சி யோகம்

குரு , லக்கினாதிபதி மற்றும் சனி  பலமுடன் காணப்படுதல். திரு ஸ்டாலின் ஜாதகத்தில் லக்கினாதிபதியான சனி குருவை பார்வையிடுகிறார். இந்த யோகம் ஜாதகருக்கு நிலைத்த புகழ் , வலிமை , பேராற்றல் ஆகியவற்றை தரும்.

பர்வத யோகம்

லக்கினாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெறின் அல்லது லக்கினத்திற்கு கேந்திரம் பெற்று காணப்பட்டாலும். திரு ஸ்டாலின் ஜாதகத்தில் லக்கினாதிபதியான சனி பகவான் நின்ற ராசிஅதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்று காணப்படுகிறார். இந்த யோகம் ஜாதகருக்கு பெரும் புகழ், திரண்ட செல்வம் ஆகியவற்றை தரும்.

யவன யோகம்

இரண்டாம் வீட்டில் சுபர் அமையப்பெற்று 2க்கு உரிய கிரஹம் பலம் பெற்று காணப்படுவது. திரு ஸ்டாலின் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் புதன் மற்றும் உச்சம் பெற்ற சுக்கிரன் அமையப்பெற்று , இரண்டாம் அதிபதியான குருவை உச்சம் பெற்ற லக்கினாதிபதியான சனி பார்வையிடுவது. இந்த யோகம் ஜாதகருக்கு உயர் கல்வி , நல்ல அறிவாற்றல், பெரும் புகழ் ஆகியவற்றை தரும்.

லட்சுமி யோகம்


சுக்கிரன் 2 ,11 ல் அமர்த்திருக்க வேண்டும். திரு ஸ்டாலின் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்ற சுக்கிரன் அமையப் பெற்றுள்ளார். ஜாதகருக்கு சுக்கிர தசை மற்றும் புக்தி நடைபெறும் பொழுது , அரசியலில் பெரும் பதவிகள் வந்து சேரும்.

கணிப்பு

திரு ஸ்டாலின் ஜாதகத்தில் எண்ணற்ற யோகங்கள் உள்ளன. சச யோகம் ,குரு சந்திர யோகம் ,பரிவர்த்தனை யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், வேசி யோகம், பாச யோகம், அகண்டசாம்ராஜ்யயோகம், தேனு யோகம், விரின்சி யோகம், பர்வத யோகம், யவன யோகம், லட்சுமி யோகம் போன்ற எண்ணற்ற யோகங்கள் உள்ளன.

திரு ஸ்டாலின் ஜாதகத்தில் பிறப்பு நிலை கிரஹங்கள் அவருக்கு நாட்டை ஆளும் யோகத்தை கண்டிப்பாக கொடுக்கும் . மேலும் , கோச்சாரத்தில் குரு பகவான் 2ம் இடத்தில இருப்பதும் , சனி பகவான் 5ம் இடத்தில இருப்பதும் கண்டிப்பாக அவருக்கு நல்ல சாதகமான பலன்களையே கொடுக்கும்.ஆகையால் திரு ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டை ஆளப்போகிற காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

22 comments:

  1. இதுதான் திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் உண்மையான ஜாதகம் அவர் தமிழக முதல்வராக நிச்சயம் வருவார்

    ReplyDelete
  2. Super அருமையான விளக்கம்

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Ucham Petra sani guruvai sapthama paarvai paarthal, athu bramahati dhosham.. CM aagave mudiyathu

    ReplyDelete
  5. பிறந்த நேரம் தெரியவில்லை என்று கூறிவிட்டு, லக்கினம் எப்படி நீங்கள் அறிந்தீர்கள்.

    ReplyDelete
  6. திரு ஸ்டாலின் ஐயா அவர்களை விட்டால் தமிழ் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது கலைஞர் அவர்கள் கண்டு எடுத்த பொக்கிஷம்

    ReplyDelete
    Replies
    1. சுடலை ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது.

      Delete
    2. Next chief minister Thalapathi

      Delete
  7. வாய்ப்பில்லை ராஜா

    ReplyDelete
  8. மகர ராகு சுயமாக நன்மைகள் செய்யகூடியது உச்ச சனியின் வீட்டில் அமர்ந்ததால் பெளர்ணமி சந்திரன் அதிசந்திர யோகத்தில் இருந்ததால் மேயர் துணை முதல்வர் பதவியை தந்தது குருதிசை இப்பொழுது அவயோக திசை உச்ச வக்கிர சனியால் பார்க்கப்பட்டு கெட்டு 2 வீட்டோடு பரிவர்த்தனை செய்திருப்பதால் 2 வீட்டின் பனை 75% செய்கிறது இப்பொழுது 11 வீட்டின் பாதகபலனை செய்யகூடும்

    ReplyDelete
  9. தமிழக முதல்வர் தங்க தளபதி

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. விருச்சிக லக்கினம் சொல்லுகிறார்கள் . எப்படி கும்ப லக்கினம் வரும் ...

    ReplyDelete
  14. பலன்கள் எழுதிய பிறகு‌ ஜாதகம் ‌கணிக்கப்பட்டது போல் தெரிகிறது.

    ReplyDelete