Search This Blog

Monday, May 29, 2017

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் !!! Removal of Brahmahathi Dosham at Thiruvidai Maruthur Mahalingeswarar

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் !!!

Thiruvidaimaruthur Mahalingeswarar


திருவிடைமருதூர் தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் இடையில் உள்ள திருபுனம் ஊரின் அருகே உள்ளது.
திருவிடைமருதூர் தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 93வது தேவாரத்தலம் ஆகும்.
Thiruvidaimaruthur Mahalingeswarar


வரகுண பாண்டியனும் பிரம்மஹத்தி தோஷமும்

திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும்.  ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அப்போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த  ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இதனால், அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. 

அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி  இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி  திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். 

எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு  சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற  வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர்  சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். 

Thiruvidaimaruthur Mahalingeswarar temple


கிழக்கு வாயிலில் நுழைந்து மேற்கு வாயில் வழியாக வர வேண்டும்

வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல  தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று  காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச்  செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். 

அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும்  இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி  கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

Thiruvidaimaruthur Mahalingeswarar- Singa Muga Kinaru

மூகாம்பிகை சந்திதி
 இங்கு மட்டுமே மூகாம்பிகை சந்திதி உள்ளது.  இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மஹத்தி " தோஷ நிவாரண தலம்

வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமென்பதால் " பிரம்மஹத்தி " தோஷ நிவாரண தலம் இது. அருள்மிகு மகாலிங்கஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாழிக்கிறார். மகாலிங்கேஸ்வரர் திருத்தலத்தை சுற்றி நான்கு வீதிகளிலும் சிவ ஸ்தலங்கள் உள்ளதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.[1] இத்தலத்தின் தலவிநாயகர் ஆண்ட விநாயகர். இத்தலத்தில் சுவாமி, அம்பாள் இருவரது சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை.27 நட்சத்திர லிங்கங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டிலே மகாலிங்கேஸ்வரர் திருத்தேர் மூன்றாவது பெரியத் தேர். பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் ஆகியோர்க்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சன்னதி உள்ளது..

Nandeeswarar -  Thiruvidai Maruthur

சசிகலா உறவினர் மகாதேவன் மரணமும், பிரம்மஹத்தி பரிகாரமும்… 
கும்பகோணம் அருகே உள்ளது திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி கோயில். இந்தத் தலத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. பிராமணர் அல்லது பசுவைக் கொன்றால் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சிறப்பு தலமாக இது கருதப்படுகிறது. கடந்த 15ம் தேதி சசிகலா உறவினர் மகாதேவன் தனது ஆதரவாளர்களுடன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். பிரம்மஹத்தி சந்நதியில் தோஷம் நீக்கும் பரிகார பூஜை ஒன்றை செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து 27 நட்சத்திர சந்நதியில் சதய நட்சத்திர லிங்கத்துக்கு விளக்கேற்றி வழிபடும்போதுதான் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக திருவிடை மருதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அங்கு சரியான வசதி இல்லை என்று கூறி தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லும்படி கூறினர். ஆனால் செல்லும் வழியிலேயே மகாதேவன் உயிரிழந்தார்.
மகாதேவன் சிறு வயதில் இருந்தே யாரையும் மதிக்காமல், மரியாதை இன்றி பேச பழக்கப்பட்டவர். பேசும்போதே அடித்துவிடும் அளவுக்கு கோபக்காரர். வெளியே செல்லும்போது அட்யாட்கள் புடைசூழ ஏராளமான கார்களில் மகாராஜா வீதி உலா வருவதைப்போலவே செல்வார். கட்டப்பஞ்சாயத்து செய்யும்போது துப்பாக்கி அவரது மேஜையின் மீது கண்ணில் படுமாறு  இருக்கும்.  பேருக்கு ஏற்றார் போல சிம்மாசனத்தில் தான் அமருவார். சிறு தவறு செய்பவர்களையும் பிரம்பு, சாட்டை என கையில் கிடைப்பதை எடுத்து அடித்து பின்னி விடுவார். இவ்வாறான அடாவடிகளில் ஈடுபட்டதால் ஜெயலலிதா இவரது கட்சிப் பதவியை பிடுங்கி ஓரம் கட்டி வைத்தார்.
பிராமணர், அல்லது பசுவைக் கொன்றால் மட்டுமே  பிரம்மஹத்தி தோஷம் செய்யப்படும். இதில் சசிகலா உறவினர் மகாதேவன் கொன்றது யாரை?

இதில் கவனிக்கப்படியான விஷயம் என்னவென்றால் மகாதேவன் கிழக்கு வாசலில் நுழைந்து பின்னர் பிணமாக கிழக்கு வாசல் வழியாக எடுத்துவரப்பட்டிருக்கார். ஆகையால் அவருக்கு ப்ரஹ்மத்தி தோஷம் விலக வில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

No comments:

Post a Comment