Search This Blog

Tuesday, June 6, 2017

ஜாதகம் மூலமாக ஒருவருடைய மரணத்தை முன் கூட்டியே துல்லியமாக கூற முடியமா? Can We Predict One's Death in Advance through Astrology ?

ஜாதகம் மூலமாக ஒருவருடைய மரணத்தை முன் கூட்டியே துல்லியமாக கூற முடியமா?

முடியும் என்கிறது ஜோதிட நூல்கள்.

How to Predict the death in Astrology ?

உதாரணமாக , செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணத்தை ஜோதிடர் டாக்டர் சி டி ரபீந்திரநாத் என்பவர் மாடர்ன் அஸ்ட்ரோலஜி டிசம்பர் 2016 மாத இதழில் துல்லியமாக கணக்கிட்டுள்ளார். ரபீந்திரநாத் அவர்கள் 10 அக்டோபர் 2016 அன்றே செல்வி ஜெயலலிதா 5 டிசம்பர் 2016 அன்று இறந்துவிடுவார் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே துல்லியமாக கணித்து எழுதியுள்ளார்.

ரபீந்திரநாத் அவர்கள் செல்வி ஜெயலலிதா ஜாதகத்தை எப்படி ஆராய்ந்து எழுதியுள்ளார் என்பதை இனி பார்ப்போம்.

Selvi J Jayalalitha


செல்வி ஜெயலலிதா ஜாதகம்

சுக்ரன்


ராகு

லக்கினம்

சூரியன்
புதன்


செவ்வாய்

சனி
சந்திரன்
குரு

கேது




ஜெயலலிதா ஜாதகத்தில் குரு பகவான் 9 ம் பார்வையாக சந்திரனை பார்த்ததால் உயர்தரமான கஜகேசரி யோகம் அமையப்பெற்றது. மிதுன லக்கினத்திற்கு 10 ம் இடத்தில் சுக்ர பகவான் உச்சம் பெற்றதால் மாளவ்ய யோகம் அமையப்பெற்றது. மிதுன லக்கினத்திற்கு 7ம் அதிபதியான குரு பகவான் 7ம் இடத்தில் அமையப்பெற்று கேந்திர ஆதிபத்திய தோஷம் அமையப்பெற்றதால் ஜெயலலிதாவிற்கு திருமணம் என்பது ஒரு கானல் நீராக ஆனது.

Selvi J Jayalalitha

13, அக்டோபர் 2014 நிலவரப்படி, செல்வி ஜெயலலிதாவுக்கு கோச்சாரரீதியாக இரண்டாம் வீட்டில் வக்கிரம் அடைந்த சனியும் மற்றும் 11ம் வீட்டில் ராகு வக்கிரம் அடைந்து 11ம் அதிபதியான செவ்வாயுடன் சேர்ந்து இருந்ததினால், செல்வி ஜெயலலிதா மீது ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக பெங்களூர் கீழ் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானது. 

ஆனால் அதிர்ஷ்டவசமாக லக்கினாதிபதியான புதன் வக்கிரம் அடைந்து ஐந்தாம் இடமான துலா ராசியில் 17 அக்டோபர் 2014 வரை சஞ்சரித்து, பிறகு தன்னுடைய சொந்த ராசியான கன்னிக்கு இடம் பெயர்ந்ததால் , சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் அவ்ருக்கு முதல்வர்  பதவி திரும்ப வந்தது.

Predicting the death through the Astrology ?


அக்டோபர் 2016 நிலவரப்படி, செல்வி ஜெயலலிதாவுக்கு குரு தசையில் சனி புக்தி மற்றும் ராகு அந்தரம் 5 டிசம்பர் 2016 வரை நடைபெற்றது.

ஜெயலலிதாவின் மிதுன லக்கினத்திற்கு , தசனாதனான  7ம் அதிபதியான குரு பகவான் மாரகாதிபதி மற்றும் பாதகாதிபதி ஆவார். மற்றும் புக்தி நாதனான சனி பகவான் அஷ்டமாதிபதி ஆவார். எனவே , ஜோதிட நூல்களில் கூறியபடி , பாதகாதிபதி தசையில் அஷ்டமாதி புக்தி நடைபெறும் பொழுது , ஜாதகருக்கு மரணம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் , செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு 5 டிசம்பர் 2016 நிலவரப்படி தசை மற்றும் புக்தி நாதர்களான குருவும் சனியும் சஷ்டாஷ்டமாக ( 6 மற்றும் 8) அமைந்து காணப்பட்டார்கள். மேலும் , பிரஹத் ஜாதக நூல் , உபய லக்கினத்திற்கு 7ம் அதிபதியோ அல்லது 7ல் நின்ற கிரகம் மாரகத்தை அல்லது மரணத்தை தரும் என்று கூறுகிறது.

செல்வி ஜெயலலிதா ஜாதகத்தில் 7ம் அதிபதியான குரு 7 ல் நின்று தசை நடந்ததால் , மாரகத்தை தன் தசை காலத்தில் கொடுத்தது. மேலும் , வக்கிரம் அடைந்த சனி 2ல் இருந்து புத்தி நடைபெற்றதால் , மரகத்தை தந்தது. மேலும் , தசை மற்றும் புக்தி நாதர்களான குருவும் சனியும் சஷ்டாஷ்டமாக அமைந்ததால் , ஜெயலலிதாவிற்கு மரகத்தை தந்தார்கள்.

ஜோதிடர் டாக்டர் சி டி ரபீந்திரநாத்  மாடர்ன் அஸ்ட்ரோலஜி டிசம்பர் 2016 மாத இதழில் துல்லியமாக கணக்கிட்டுள்ளார். ரபீந்திரநாத் அவர்கள் 10 அக்டோபர் 2016 அன்றே செல்வி ஜெயலலிதா 5 டிசம்பர் 2016 அன்று இறந்துவிடுவார் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே துல்லியமாக கணித்து எழுதியுள்ளார்.

ஜோதிட சாஸ்திரம்  18 ரிஷிகளால் இயற்றப்பெற்றது. சூரியன் , பிரம்மன் , வியாஸர், வசிஷ்டர் , அத்ரி , பராசரர் , காசியபர் , நாரதர் , கர்கர் , மரீசி , உலோமெர், யவனர் , அகஸ்தியர் , காக புஜண்டர் போன்ற முனிவர்களால் ஜோதிட சாஸ்திரம் இயற்றப்பட்டது என்று கூறுவார்கள்.

18 ரிஷிகளால் இயற்றப்பெற்ற ஜோதிட சாஸ்திரத்ததால் ஒருவருடைய மரணத்தை கூட மிக துல்லியமாக கூறிவிடமுடியும் என்பது இதன் மூலமாக தெள்ள தெளிவாக தெரிகிறது.




No comments:

Post a Comment