Search This Blog

Sunday, June 4, 2017

கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப தோஷம் விலக பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் (Pamban Shri Kumara Gurudasa Swamigal) அருளிய தௌத்தியம் (திருவடித் துதி)

கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப தோஷம் விலக பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் (Pamban Shri Kumara Gurudasa Swamigal) அருளிய தௌத்தியம் (திருவடித் துதி)



கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப தோஷம் எவ்வாறு ஜாதகத்தில் அமைகிறது?


Pamban Shri Kumara Gurudasa Swamigal)


நாகதோஷங்களில் மிகவும் சக்தி வாய்ந்த தோஷமாகக் கால சர்ப்ப தோஷத்தைச் சொல்வார்கள். ஒரு ஜாதகருடைய ஜனன ஜாதகத்தில் ராகுவுக்கும் - கேதுவுக்குமிடையே எல்லாக் கிரகங்களும் இருக்குமானால் அந்த ஜாதகம் கால சர்ப்ப தோஷ ஜாதகம் எனப்படும். ஒன்று அல்லது இரண்டு  வெளியில் இருந்தாலும் கால சர்ப்ப தோஷமே என்பவர்களும் உண்டு.

லக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது  மற்றும் 2இல் ராகு, 8இல் கேது அமையப்பெற்றால் அதனை சர்ப தோஷம் என்று கூறுவார்கள்.

திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் சர்ப தோஷம் சாதாரணமாக உருவாக்கும்.

வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்று கடைசி நேரத்தில் வெற்றியை குறைக்கக் கூடிய அம்சம் இந்த கால சர்ப தோஷத்திற்கு உண்டு. 

கால சர்ப்ப தோஷம் அமைந்த பிரபலங்கள்

தேசத்தந்தை மகாத்மா காந்தி, பண்டிட் ஜவகர்லால் நேரு, நெப்போலியன், ஹிட்லர், முசலோனி, டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜீவ் காந்தி , ஹர்ஷத் மேத்தா , இசைஞானி இளையராஜா போன்றோர் இந்த கால சர்ப்ப தோஷ ஜாதகத்தில் பிறந்தவர்களே..இவர்கள் சிறிய வயதில் பல தொல்லைகளுக்கு ஆளாகி, தோஷம் நிவர்த்தியான பின், உயர்ந்த நிலையை எட்டியவர்கள்.

இசைஞானி இளைய ராஜா ஜாதகம்

Music Director Ilaya Raja

திரு இளைய ராஜா ஜாதகம் கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம் ஆகும்.திரு ராஜா ஜாதகத்தில் அனைத்தும் கிரஹங்களும் ராகு கேது பிடிக்குள் இருக்கின்றன.

இளைய ராஜா ஜாதகம்


செவ்வாய்



லக்கினம்
சந்திரன்
சூரியன்
புதன் சனி





2 ஜூன் 1943
06.40 AM
சுக்கிரன் குரு ராகு

கேது









வீட்டில் வறுமைக் காரணமாகத் தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திக்கொண்டார். தனது 14வது வயதில் நாட்டுப்புறப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர், 19வது வயதில், அதாவது 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார்.

கால சர்ப்ப தோஷம் அமைந்த காரணத்தினால் இளையராஜா வயது வரை வறுமையில் வாட நேர்ந்தது. 33 வயதுக்கு பிறகு அவருக்கு ராஜ யோக வாழ்வு அமைந்தது.

துவிதநாகம் என்றல் என்ன?

Two Snakes Dancing

ஞானபானு பாம்பன் சுவாமிகள் (Pamban Swamigal)  இயற்றிய துவிதநாக பந்தம் ஆகும்.  இதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்.  துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும்.  இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் மேலே காணும் தோற்றம் ஆகும்.

நாகதோஷம் பரிகாரம்

நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.  அதற்கு பொருள் செலவு அதிகம்.  செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது.

துவிதநாகபந்த பட வழிபாடு


Two Snakes Dancing


நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது. அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். மேற்கண்ட துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.


kumaarasthavam


பூஜையை எந்த நாட்களில் ஆரம்பிப்பது?

முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும்.  அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும்.

முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும்.  திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.

வேல் வழிபாடு


Lord Muruga's Vel


 பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று.  அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும்.

அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும். ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று.

பஞ்ச எண்ணெய் தீப வழிபாடு

 ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும்.  மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.

சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்க வழிபாடு


Lord Muruga


 தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும்.

பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் (Pamban Shri Kumara Gurudasa Swamigal) அருளிய தௌத்தியம் (திருவடித் துதி)



                            அரஹர மந்திர அமல நிரந்தர
சரவண சம்ப்ரம சங்கர புத்திர
சுரபதி பூம சுகோதய போதக
பரிபுர சததள பாத நமஸ்தே

ஆதி அனாதியும் ஆன வரோதய
சோதி நிலாவு சடானன சுபகர
வேதக சமரச விண்டலர் பண்டித
பாதக கண்டன பாத நமஸ்தே

இந்துள அம்பக இங்கித மங்கல
சுந்தர ரூப துவாதச கரதல
சந்திர சேகர தடதா கிடதடப்
பந்திகொள் நிர்த்தன பாத நமஸ்தே

ஈசுர நந்தன ஈசுர புங்கவ
தேசுற குண்டல சித்திர பந்தன
ஆசறு சஸ்திர ஹஸ்த சரோருக
பாச விமோசன பாத நமஸ்தே

உச்சித மஞ்ஞையில் ஊர்அதி மோகன
நிச்சய உத்தர நித்ய மனோலய
சற்சனர் மித்திர சத்துரு கண்டன
பச்சைஅம் புஷ்கர பாத நமஸ்தே

ஊர்த்துவ நாடகர்க் கோதிய தேசிக
ஆர்த்த தயித்தியர் அடல்தெறு காதக
கூர்த்திகை வீரிய குக்குட கேதன
பார்க்க அரும்குக பாத நமஸ்தே

எண்ணறு வைபவ இந்த்ர விசேஷண
புண்ணிய உத்தம பூரண பச்சிமக்
கண்இல கும்சிவ கந்த கிருபாசன
பண்ணவர் பூஜித பாத நமஸ்தே

ஏரக நாயக என்குரு நாயக
தாரக நாயக ஷண்முக நாயக
காரக நாயக கதிதரு நாயக
பாரக நாயக பாத நமஸ்தே

ஐங்கர சோதர அம்பிகை காதல
மங்கள வல்லி மனோகர குஞ்சரி
இங்கித காவல இகபர சாதக
பங்கயன் மால்பணி பாத நமஸ்தே

ஒகரம ஹாரத ஒளிர்புய அமுதர்கள்
புகழ்உப வீதவி பூதிகொள் முண்டக
ரகித விதூன லலாட விலோசன
பககுஹ பாவக பாத நமஸ்தே

ஓம்அர ஹரசிவ ஓம்சர வணபவ
ரீம்அர ஹரசிவ நிகழ்பரி புரபவ
ஸ்ரீம்அர ஹரசிவ திரள்பவம் ஒழிவளர்
பாமகள் புகழ்அருள் பாத நமஸ்தே

No comments:

Post a Comment