உங்கள் கஷ்டங்கள் நீங்க
உங்கள் குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்கு வரவழைக்க வேண்டுமா ?
ஒரு சிலருக்கு வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். சிலருக்கு சரியான வேலை வாய்ப்பு அமைவதில்லை. ஒரு சிலருக்கு
திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. குடும்ப வாழ்வில் அமைதி
இன்மை , கடன் தொல்லை , தொழிலில் நஷ்டம் , காரியத்தடைகள் போன்றவற்றால் சிலர் பாதிப்பு அடைகிறார்கள் .
மேலும் , ஏழரை சனி ,
அஷ்டம சனி , கோச்சாரத்தில் குரு பகவான் போன்ற கெட்ட இடங்களில் அமைவது ,
மாரகாதிபதி , அஷ்டமாதிபதி தசை , புக்தி நடை பெறுவது போன்றவற்றால் வாழ்க்கையே போராட்ட காலமாக சிலருக்கு மாறிவிடும்.
சொல்லனா துன்பம்
உங்களை வாட்டினால் ?
ஏழரை சனி , அஷ்டம சனி ,
கோச்சாரத்தில் குரு பகவான் போன்ற கெட்ட
இடங்களில் அமைவது , மாரகாதிபதி ,
அஷ்டமாதிபதி தசை , புக்தி நடை பெரும்பொழுது ஒருவருக்கு என்ன மாதிரியான தீய
பலன்கள் ஏற்படக்கூடும் என்பதை கீழ் கண்ட பாடல் தெளிவாக்குகிறது.
ஆ ஈன, மழை பொழிய, இல்லம்
வீழ
அகத்தடியாள் மெய் நோக, அடிமை சாக
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்து வரச், சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டுக்
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே!
அகத்தடியாள் மெய் நோக, அடிமை சாக
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்து வரச், சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டுக்
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே!
இந்த
பாடலின் பொருள்... ''பசுவானது கன்று போட, பெரும் மழை பொழிய, வீடு இடிந்து விழ, வீட்டுக்காரி உடல் நலமின்றி வருந்த, வேலைக்காரன் இறந்து போக, நிலத்தில் ஈரம் காய்ந்து விடுமே என்று விதை நெல்லைச் சுமந்தொருவன்
விரைவாகச் செல்லும் வேளை; கடன்காரன் வழி மறிக்க, சாவு சேதி கொண்டு ஒருவன் எதிரே வர, காலில் பாம்பு கடிக்க, தவிர்க்க முடியாத முக்கியமான விருந்தினர் வந்து சேர, வரி செலுத்தக்கோரி மணியக்காரர் நிர்ப்பந்திக்க, என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்று தவித்துக் கொண்டிருந்த வேலையில் - புரோகிதர், தனக்குச் சேர வேண்டிய தட்சணையைக் கேட்டாராம்!''
அதாவது , ஒருவருக்கு ஜாதக
ரீதியாக நேரம் சரியில்லை என்றால் , மேற் சொன்ன
துன்பங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாம்.
இதனை எவ்வாறு தவிர்க்கலாம்? பய பக்தியுடன்
உங்கள் குல தெய்வ வழிபாட்டால் இந்த துன்பங்கள் உங்களை நெருங்க வண்ணம் பார்த்து
கொள்ளலாம்
உங்கள் வீட்டிற்குள் குல தெய்வ சக்தியை அழைக்க எளிய பூஜா வழி முறை கீழே
தரப்பட்டுள்ளது.
பூஜைக்கு தேவையான
பொருட்கள்
வெட்டிவேர் சிறிதளவு,
பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு, பன்னீர் – இவை அனைத்தையும் ஒரு கலச செம்பில்
போட்டு பன்னீர் எந்த அளவோ அதே அளவு தண்ணீர் ஊற்றி, கலச சொம்பை சுற்றி நூல் சுற்ற தெரிந்தவர்கள் சுற்றலாம். நூல் சுற்ற
தெரியாதவர்கள் பட்டு துணியை சுற்றி விடலாம்.
பூஜையறையில் ஒரு பலகையை
வைத்து, அதில் வாழை இலை வைத்து அதில் பச்சரிசி பரப்பி
அதன் மேல் கலச செம்பை வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைத்து (நுனி பகுதி மேல் நோக்கி
இருக்க வேண்டும்.) வாழைப்பூவுக்கும் கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை
சுற்றி வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைக்கவும்.
வில்வ இலை அல்லது
ஊமத்தம் பூ அர்ச்சனை செய்யவும். வாழைப்பூ மூன்று நாட்கள் வரை தாங்கும். பூஜை
மூன்று நாட்களே போதும். மேலும் தொடர்ந்து செய்ய விரும்புவர்கள் வாழைப்பூவை மட்டும்
மாற்றினால் போதுமானது. பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும் அக்கம் பக்கத்து வீட்டில்
உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
கலசத்தில் உளளவற்றை வீட்டில் தெளித்துவிட்டும், குளிக்கும் தண்ணீரில் விட்டு குளித்துவிடவும்.
மஞ்சள், மண், சந்தணம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி – இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.
தினந்தோறும் நடைபெறும் பூஜையில் மேல்சொன்ன சிவப்பு துணியில் உள்ள பூஜை பொருள்களோடு பூஜை செய்ய வேண்டும்.
பூஜைக்குறிய மந்திரம்:-
ஓம் பவாய நம
ஓம் சர்வாய நம
ஓம் ருத்ராய நம
ஓம் பசுபதே நம
ஓம் உக்ராய நம
ஓம்
மஹாதேவாய நம
ஓம் பீமாய நம
ஓம் ஈசாய நம
தினமும் 108 தடவை
காலையும் மாலையும் கூறி பூஜை செய்து வந்தால், நாம்
எண்ணியதை நம் குலதெய்வம் தருவார்கள் என்பது நம்பிக்கை.. மற்றும் நம்
குலதெய்வம் நம் வீட்டில் தங்கி நம்மை துன்பங்களிலிருந்து காப்பாற்றுவார் என்பது
நம்பிக்கை. வியாபாரம் செயும்
இடங்களிலும் இதனை கட்டலாம்.
No comments:
Post a Comment