Search This Blog

Saturday, July 1, 2017

நடமாடும் சித்தரை நேரில் கண்டு அவருடைய ஆசி பெறவேண்டுமா ? Maha Aanda Siddhar

நடமாடும் சித்தரை நேரில் கண்டு அவருடைய ஆசி பெறவேண்டுமா ?

வேலூர் காட்பாடி அருகில் உள்ள மகா தேவமலை சென்று மஹாதேவ ஆனந்த சித்தரை தரிசியுங்கள் iii

மஹாதேவ ஆனந்த சித்தர்




தென் இந்தியாவின் மகா சித்தர்களின் 19வது வழி தோன்றலாக மகா தேவ ஆனந்தர் சித்தர் விளங்குகிறார். இவர் வேலூர் காட்பாடி அருகே உள்ள மகா தேவ மலையில் தங்கி இறை பணி ஆற்றிவருகிறார்.

 இவர் மற்ற சித்தர்களிடம் இருந்து வேறு பட்டு காணப்படுகிறார். இவர் 2003 வருடம் முதல் ஆகாரம் , நீர் போன்றவற்றை உண்ணுவதில்லை மற்றும் அருந்துவதில்லை.

தினமும் அன்னதானம்


இராமலிங்க ஸ்வாமிகள் வடலூரில் எப்படி சத்ய சபை நிறுவி அங்கு தினந் தோறும் அன்ன தானம் வழங்கி வந்ததை போல் இவரை காண வரும் பக்தர்களுக்கு மகா தேவ மலையில் இரவு பகலாக அன்னதானம் வழங்க படுகிறது.

மிகவும் வரவேற்கத்தக்க விஷயம் என்னவென்றால் தான் ஆகாரம் எதுவும் உண்ணவில்லை என்றாலும் மலையில் உள்ள கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாகு பாடி இன்றி உணவு இரவு பகல் என்று பாராது அளித்து வருகிறார்.

தீராத நோயை தீர்க்கும் சக்தி படைத்தவர்

இவர் தீராத நோயை தீர்க்கும் சக்தி படைத்தவர். சிவபெருமான் இவர் கனவில் தோன்றி , நீ 500 வருடங்கள் வாழ்வாய் என்று கூறியுள்ளார்.

இவர் சிவனுடைய அருள் பெற்றவர் என்பதால் , இவரை தேடி வரும் பக்தர்களின் குறையை தானே அறிந்து அதற்கு தேவையான பரிகாரமும் ஆசியும் வழுங்கிறார்.

கோயில் கட்டும் திருப்பணி

இவர் மகா தேவ மலையில் ஒரு பெரிய கோயிலை தனி ஒருவறாக கட்டிவருகிறார். இதற்கான பணிகள் இன்றும் நடைபெற்று வருகிறது. அந்த காலத்தில் அரசர்களால் மட்டுமே கோயில் கட்ட முடிந்தது. முற்றும் துறந்த துறவியான இவர் ஒரு பிரம்மாண்டமான கோயிலை கட்ட முடிகிறது என்றால் நிச்சயமாக அது சிவ பெருமானின் அருளால் என்று கூறலாம்.

மகா ஆனந்த சித்தர் முதலில் மகா தேவ மலையில் பக்தர்கள் சிரமமின்றி மலை ஏறி வருவதற்கு படிகள் அமைத்தார் . பின்னர் த்யானமண்டம் காட்டினார். மிக பிரமாண்டமான தக்ஷிணாமூர்த்தி சிலை ஒன்றை அதன் பிறகு நிறுவினார்.


வாரத்தின் சில நாட்களே இவர் பக்தர்களை நேரில் சந்தித்து ஆசி கூறுகிறார் மற்ற நாட்களில் இவர் கோயில் கட்டும் திருப்பணிகளை நேரடியாக மேற்பார்வை இட்டு வருகிறார்.

பக்தர்களை சந்திக்கும் நாட்கள்

இவர் பக்தர்களை சந்தித்து ஆசி தரும் நாட்கள்

வியாழன் குரு பூஜை
பகல் 1.00 -3.00 வரை
,சனிக்கிழமை
பகல் 1.00 -3.00 வரை
அமாவாசை அன்று
மாலை 5.00 _7.00

மேற்கண்ட நாட்களில் மட்டுமே இவர் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவார் மற்ற நேரங்களில் கோவில் திருபணியில் வேலைகளை அவரே செய்வார்.அப்போது பக்த்தர்களுக்கு அனுமதி இல்லை.
மஹானந்த சித்தர் ஞான திருஷ்டி உள்ளவர். இவரை சந்தித்து ஆசி பெற வந்துள்ள பக்தர்களின் குறைகளை தன்னுடைய ஞான திருஷ்டியால் கண்டறிந்து அதற்கு தகுந்தாற் போல் பரிஹாரங்களை சொல்லுவார். இவரை புகழ்ந்து பேசி அல்லது சன்மானங்களை கொடுத்தோ இவரை அணுக முடியாது.

வாழ்க்கை வரலாறு
மகா ஆனந்த சித்தர் தருமபுரி மாவட்டத்தில் டிசம்பர் 6, 1930 பிறந்தார். தன்னுடைய இளம் வயது காலத்தில் இவர் மஞ்சள் வியபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

சிவ பெருமான் இவருடைய கனவில் தோன்றி இறை பணியில் ஈடுபடுமாறு கட்டளை விட்டதால் , தன்னுடைய 35 வயது முதல் தமிழ் நாட்டில் உள்ள கோயில்களை புனரமைக்கும் பணியில் ஈடு பட்டு வந்தார். ஆந்திரப்ரதேஷ் காளஹஸ்தியில் உள்ள லோகுவாக்குலம் ப்ரஜதீஸ்வர் கோயிலில் அன்னதான பணியை மேற்கொண்டார்.

டிசம்பர் 25 , 2001 ல் சிவ பெருமான் இவருடைய கனவில் தோன்றி நீ மிகவும் அதிர்ஷ்டசாலி. இந்த பிறவியில் நீ சாதாரண மனிதன் அல்ல. நீ ஒரு சித்தர். நீ 500 வருடம் இந்த பிறவியில் வாழ்வாய். மேலும் மகா தேவா மலைக்கு நீ செல். அங்குயுள்ள குகையில் வாழ்ந்து இறைபணி ஆற்றி உன்னை காண வரும் பக்தர்களுக்கு அருள் புரிவாயாக என்று கூறினார்.

சிவபெருமான் கூறியப்படியே மஹா ஆனந்த சித்தர் மகா தேவா மலைக்கு சென்று சிவ பெருமானை நோக்கி தவம் புரிய ஆரம்பித்தார். சிவ பெருமான் மறுபடியும் அவர்முன் நேரில் தோன்றி நீ தினமும் பல் துலக்க மற்றும் குளிக்க வேண்டியது இல்லை சித்ரை வருடப்பிறப்பு அன்று பல் துலக்கி குளித்தால் போதுமானது என்று அருளினார்.

இவருடைய பக்தர்கள் சித்தரை வருடப்பிறப்பன்று இவருக்கு குளியல் ஏற்பாடு செய்து ஒரு பெரும் விழா ஆக நடுத்துகிறார்கள்.

சிவ பெருமான் இட்ட கட்டளைகள்

சிவ பெருமான் கீழ்கண்ட கட்டளைகளை மகா தேவ ஆனந்தர் சித்தருக்கு இட்டார்.

  • ·  நீ யாரிடமும் யாசகம் கேட்க கூடாது நீ வேண்டும் செல்வம் உன்னை வந்து தானாக சேரும்.
  • ·   இந்த மலையில் உன்னை நாடி வரும் பக்தர்களின் ஆரோக்கிய குறைகளை உன் ஆசியால் சரி செய்வாய் .
  • ·       அவர்களின் நியாமான குறைகளை உன் ஆசியால் போக்குவாய்.
  • · இந்த கணம் முதல் நீ தண்ணீர் குடிப்பதையும், உணவு உண்ணுவதையும் நிறுத்திவிடுவாய்.. உனக்கு பசியோ, தாகமோ ஏற்படாது.
என கூறி சிவபெருமான் மறைந்து விட்டார்.

மஹா ஆனந்த சித்தர் நெற்றியில் உள்ள குறி சிவபெருமானின் தலையில் காணப்படும் ஐந்து தலை நாகம் போன்று காட்சி தருகிறது. மகா ஆனந்த சித்தர் தினமும் வாசனை நிரம்பிய மலர்களால் வழிபட்டுவருகிறார்.

நெருப்பினில்  நின்று தவ யோகம்


மகா ஆனந்த சித்தர் நெருப்பினில் நின்று தவம் செய்யம் யோக சித்தி யை உடையவர். தீ இவரை ஒன்றும் செய்யமுடியவில்லை. நாம் ஒரு சில நாட்கள் தண்ணீரோ, ஆகாரமோ உட்கொள்ளவை என்றால் மரணம் அடைய நேரிடும் அனால் மகா ஆனந்த சித்தரே 2003 முதல் உணவு தண்ணீர் அருந்தாமல் உயிருடன் இருப்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம்.

வெளி நாட்டு பக்தர்கள்

இவரை காண்பதற்கு பல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளார்கள் இவரை பலர் தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைக்கிறார்கள் அவர்களிடம் இவர் சொல்லும் ஒரே பதில் இந்த கோயிலை கட்டிய பிறகுதான் வெளிநாடுகளுக்கு வருவேன் என்று  கூறுகிறார்.

எப்படி மகா தேவமலையை அடைவது?

மகா தேவமலை சென்னை பெங்களூர் புகைவண்டி மார்கத்தில் அமைந்துள்ளது. காட்பாடி மேற்கில் குடியாத்தம் செல்லும் சாலையில் 19 கிலோ மீட்டரில் மகா தேவமலை அமைந்துள்ளது. பழைய கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ( ) 4 கிலோ மீட்டர் உள்ள பயணிக்க வேண்டும். 

வேலூர்இல் இருந்து வருபவர்களுக்கு காட்பாடி வந்து அங்கிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் பயணித்து மகா தேவ மலையை அடைய வேண்டும்.

மகா ஆனந்த சித்தரை பற்றி மேலும் அறிய  இந்த விடியோவை கிளிக் செய்யவும்


.மகா தேவ மலை அடிவாரத்தில் சித்தர்களின் சமாதி


.மகா தேவ மலை அடிவாரத்தில் மேலும் மூன்று சித்தர்களின் ஜீவசமாதி உள்ளது . இங்கு செல்லும் பக்தர்கள் மறவாமல் இந்த ஜீவசமாதிகளை தரிசித்து பயன் பெறவேண்டும்.

No comments:

Post a Comment