யோனி பொருத்தம் ஏன்
கட்டாயம் பார்க்கவேண்டும் ?
17 வயது பையனுடன் ஓடிய 28வயது 2 குழந்தைகளுக்கு தாய்
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள ஒரு கிராமத்தைச்
சேர்ந்த 28 வயதுடைய இளம்பெண்ணுக்கு, கணவரும்,
8 வயதில்
ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும்
உள்ளனர். இளம்பெண் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு
அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பொருட்கள் வாங்க வருவார். அப்போது, அந்த சிறுவனுக்கும்,
இளம்பெண்ணுக்கும்
இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
முறையற்ற உறவு
இந்த விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர்
தனது மனைவியை கண்டித்தார். இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி
தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதல் கண்ணை மறைத்ததால், கடந்த
4-ந்
தேதி அந்த இளம்பெண் தனது கணவனையும், 2 குழந்தைகளையும்
தவிக்கவிட்டு, 17வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து இளம்பெண்ணை காணவில்லை என அவரது கணவர்
ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், சிறுவனை
காணவில்லை என அவரது தாயாரும் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார். இந்த
புகார்களை பெற்றுக்கொண்ட போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி
வந்தனர்.
இதற்கிடையே, இருவரும் பழனியில் ஒரு
வீட்டில் வசித்து வருவதாக சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து
அவர்கள் போலீசாரின் உதவியுடன் இருவரையும் அழைத்துவந்து ஆரல்வாய்மொழி போலீஸ்
நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தாயை பார்த்து
குழந்தைகள் கதறல்
இதுகுறித்து தகவல் அறிந்த இளம்பெண்ணின் கணவர், தனது
குழந்தைகளுடன் போலீஸ் நிலையம் சென்றார். தாயை பார்த்ததும் குழந்தைகள் 2பேரும்
கதறி அழுதனர்.
இதைத்தொடர்ந்து, மனைவியை தன்னுடன் வருமாறு
கணவர் அழைத்தார். இந்த பாசபோராட்டத்தையும் அந்த பெண் பொருட்டாக
எடுத்துக்கொள்ளவில்லை. கணவருடன் செல்ல மறுத்து சிறுவனுடன்தான் வாழ்வேன் என அடம்
பிடித்தார்.
இளம்பெண், போலீசாரிடம், ‘எங்களை தனியாக விட்டு விடுங்கள்,
நாங்கள்
எங்கேயாவது சென்று சேர்ந்து வாழ்கிறோம்’ என கெஞ்சினார். அத்துடன் சிறுவனும்
உறவினருடன் செல்ல மறுத்து இளம்பெண்ணுடன் செல்வதில் உறுதியாக இருந்தார்.
இதைப் பார்த்த போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். மேலும், இருவரும்
சேர்ந்து வாழ சட்டத்தில் அனுமதி இல்லை என அறிவுறுத்தினர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு, இருவரும்
பிரிந்து செல்வது என முடிவெடுத்தனர். ஆனால், இளம்பெண் கணவருடன்
செல்லாமல் தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறினார். இதையடுத்து போலீசார்
இருவருக்கும் அறிவுரை கூறி அவரவர் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
யோனி பொருத்தம் ஏன்
கட்டாயம் பார்க்கவேண்டும் ?
காதல் திருமணம் , மற்றும்
மாமன் மகளை திருமணம் செய்வதற்காக யோனி பொருத்தம் இல்லையென்றாலும் திருமணம் செய்கிறார்கள். பின்னர் ஆரல்வாய்மொழியில் நடந்த சம்பவம்
போன்று நடை பெற வாய்ப்புள்ளது..
ஜாதகத்தில் கணவன்
மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை யோனி பொருத்தம் மூலமாக அறிந்து கொள்ளலாம். யோனி பொருத்தம்
தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம்.
27 நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் & பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண் & பெண் பகை மிருகமெனில் மட்டுமே யோனி பொருத்தமில்லை என்று நினைவில் கொள்ள வேண்டும்.
ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் என்பது மிகவும் சிறப்பான
அமைப்பாகும். ! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும்.
சேர்க்கலாம் , ஆண் பெண் பகை
மிருகம் இருந்தால் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.
மற்ற 9 பொருத்தங்கள் எத்தனை இருந்தாலும் , யோனி பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யவே கூடாது.
கீழ்கண்ட அட்டவணை 27 நட்சத்திரங்களை 13 மிருகங்களாக பிரித்து
காட்டுகிறது.
நட்சத்திரமும்
அதன் மிருகமும்
நட்சத்திரம்
|
மிருகம்
|
அஸ்வினி, சதயம்
|
குதிரை
|
பரணி, ரேவதி
|
யானை
|
கார்த்திகை, பூசம்
|
ஆடு
|
ரோகிணி, மிருகசீரிஷம்
|
பாம்பு
|
திருவாதிரை, மூலம்
|
நாய்
|
புனர்பூசம், ஆயில்யம்
|
பூனை
|
மகம், பூரம்
|
எலி
|
உத்திரம், உத்திரட்டாதி
|
பசு
|
அஸ்தம், சுவாதி
|
எருமை
|
சித்திரை, விசாகம்
|
புலி
|
அனுஷம், கேட்டை
|
மான்
|
பூராடம், திருவோணம்
|
குரங்கு
|
அவிட்டம், பூரட்டாதி
|
சிங்கம்
|
உத்திராடம்
|
கீரி
|
கீழ்கண்ட அட்டவணை எந்த மிருகம் எந்த
மிருகத்திற்கு பகை மிருகம் என்று பட்டிலயிலுடுகிறது .
பகை மிருகம்
|
|
குதிரை
|
எருமை
|
ஆடு
|
குரங்கு
|
பாம்பு
|
எலி
|
பசு
|
புலி
|
எலி
|
பூனை
|
கீரி
|
பாம்பு
|
மான்
|
நாய்
|
உதாரணம் : ஆண்
நட்சித்திரம் உத்திரம் பெண் நட்சித்திரம் சித்திரை இவை பசு புலி ஆக முறையே வருவதால் இவை ஒன்றுக்கு ஒன்று பகை . ஆகவே இவற்றை சேர்ப்பது தவிர்க்க வேண்டும்.
ஏன் முக்கியமாக
யோனி
பொருத்தம் பார்க்கவேண்டும் ?
யோனி பொருத்தம்
என்பது தம்பதிகள் மத்தியில் தாம்பத்திய வாழ்க்கை குறித்து கூறும் பொருத்தம் ஆகும்.
கணவன் – மனைவி வாழ்வில் இல்வாழ்க்கை இன்பம், மகிழ்ச்சி
போன்றவற்றை இது குறிக்கிறது. தம்பதிகளிடைய
யோனி பொருத்தம் இல்லை எனில், அவர்களது
தாம்பத்திய வாழ்க்கை சிறக்காது..கணவன் – மனைவி உறவில் வேட்கை குறைவாக இருக்கும்
என்றும், குழந்தை பாக்கியம் ஏற்பட
தடை ஏற்படுகிறது..
No comments:
Post a Comment