Search This Blog

Tuesday, February 9, 2021

2021 பெப்ரவரி 10,11 தேதிகளில் மகர ராசியில் நிகழும் ஆறு கிரஹ சேர்க்கை ஆபத்தானதா ? இந்த 6 கிரஹ சேர்க்கையால் உங்கள் ராசிக்கு நன்மையா ? தீமையா ?

 

2021 பெப்ரவரி 10,11 தேதிகளில் மகர ராசியில் நிகழும் ஆறு கிரஹ சேர்க்கை ஆபத்தானதா ?

இந்த 6 கிரஹ சேர்க்கையால் உங்கள் ராசிக்கு நன்மையா ? தீமையா ?

வருகிறபிப்ரவரியில் 10/02 /2021 முதல் 12/02/2021 வரை ஆறு கிரகங்கள் மகரராசியில் இருக்கும்.இதை கிரதோஷம் எனகுறிப்பிடுகிறார்கள்.

மகர ராசியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு 10, 11 , 12ம் தேதி அதிகாலை 2 மணி வரை நிகழ உள்ளது.

2019 டிசம்பரில் வந்தது போல இப்போதும் 6 கிரஹ சேர்க்கை ஏற்படுகிறது. கொரோன தாக்கம் இன்னும் விலகாத நிலையில் மற்றுமொரு 6 கிரஹ சேர்க்கை . . இந்த நிகழ்வு போர் பயம்,மற்றும் மக்களுக்கு வியாதிகள் வரும் என சாஸ்திரம் கூறுகிறது.

தை அமாவாசையும், 6 கிரக சேர்க்கை 2021 சிறப்பும் :

2019 டிசம்பரில் வந்த 6 கிரஹ சேர்க்கை சூர்ய கிரஹணம் சமயத்தில் ஏற்பட்டது.

சூரியனும், சந்திரனும் சேரும் நாள் அமாவாசை ஆகும். அப்படி மகர ராசியில் ஏற்கனவே இருக்கும் சூரியனுடன் , சந்திரன் சேர்க்கை நடைபெற உள்ளது.

தை அமாவாசை எனும் சிறப்பான நாளில் இது நடப்பது மேலும் சிறப்பாகும்.

அமாவாசை யோகம்-

சூரியன்,  சந்திரன் இணைவும், தொடர்பும் ஜாதகருக்கு மிகப் பெரிய யோகத்தை தருகின்றது.

 

பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு

பகலவனும் கலை மதியும் கோணமேற

சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும்

செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு

ஆறப்பா அமடு பயமில்லை யில்லை

அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன்

கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில்

கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே

          சூரியனும் சந்திரனும் இணைந்து 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு அதிக செல்வம், வீடு,  பூமி, ஆயுள் விருத்தி, பலவகையில் செல்வம் கிட்டும்.

இரவில் சப்தங்களைக் கேட்பான் 78 வயது வரை ஆயுள் பலம் உள்ளவர்.

மற்றொரு பாடலில் சூரியன், சந்திரன் இணைந்து 7-ல்  இருந்தால் செல்வங்கள் குவியும். அனைத்து சுகபோக வசதியுடன் வாழ்வார்கள் என கூறுகின்றார்.

கதிரொடு மதியுங்கூடி கலந்தொரு ராசி நிற்க

துதிபெறு பலவாயெந்திரம் சூட்சுமக் கருவியாலும்

அதிவித பாஷாணங்களமைந்திடும் வல்லோனாகி 

விதியுடனிருப் பனின்னோன்

                                                மேன்மையாமறிவுள்ளேனே

       சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் பல எந்திர கருவிகள் செய்வான். பல மருத்துவம் செய்வான்.புத்தி கூர்மையுள்ளவனாய் இருப்பான்.

     சூரியனும், சந்திரனும் இணைந்து அவர்களில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறும் நிலை அல்லது ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால்

ஜாதகர் சிறந்த நிர்வாகியிகவும், செல்வம், புகழ், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள்.

      திரு.லால்பகதூர் சாஸ்திரி 

அவர்கள்.ஜாதகத்தில்  10-ல் சூரியனும், சந்திரனும் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருக்கிறர். நேர்மையான அரசியல் வாதியாக பாரதப் பிரதமர் பதவியைவகித்தார்

 

ஆறுமி ஆறு தன்னில் அம்புலி கதிரோன் சேர 
கூறுவாய் ஈனன் என்று கொடும்பிணி விரோதன் என்று 
சீருள அன்னை தந்தை செல்வமும் விரயமாவதோடு
வேறு  வேறு ஆவார் என்பது வேதியர் உரைத்த வாக்கு "

                 மேற்கண்ட பாடலிருந்து "சூரியன் பகவான் சந்திர பகவானோடு பணிரெண்டில் சேர்ந்து இருக்கும் காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறந்தால் பாவம் சீரோடும் ,சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருந்த அம்மா மற்றும் அப்பா தனித்தனியாக பிரிந்து வாழ்வார்.அவர்களது செல்வமெல்லாம் குறைந்து போகும்.அவன் கெட்டவனாகவும் பெயரெடுப்பான்

எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் ?

இயற்கை மாற்றம், பருவகால மாற்றங்கள் ஏற்படக்கூடும். உலக அரசியலில் பல மாற்றங்கள் உண்டாக வாய்ப்புள்ளது

ராசி சக்கரத்தில் 10ம் இடமான மகரத்தில் இந்த நிகழ்வு நடக்க உள்ளது. மகரம் சனியின் ஆட்சி வீடு. இங்கு சனி ஆட்சி பெற்று இருப்பதோடு, குரு எனும் சம கிரகமும், சூரியன், சந்திரன் எனும் எதிரி கிரகங்கள் இருக்கின்றன. புதன், சுக்கிரன் ஆகிய நட்பு கிரகஙகள் உள்ளன

எந்த ஒரு வீட்டில் ஒரு கிரகம் ஆட்சி பெற்று அமைந்திருக்கிறதோ, அங்கு எந்த கிரக பகைமை, கிரக போர் என எதுவாக இருந்தாலும் எடுபடாது. அதனால் அந்த இடம் பாதிக்கப்படாது. அதே போல் சுப கிரகங்கள் அதிகமாக இருந்தால், மற்ற மோசமான பலன்கள் தரும் கிரகங்களின் பலன்களும் அடிபட்டுப் போகும்.

அப்படி மாபெரும் சுப கிரகமான குருவுடன், சுக்கிரன், சூரியன் இணைந்துள்ளனர். 

மெதினி ஜோதிடம்

5 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு ராசியில் (ராகு-கேது தவிர) வந்தால், நாட்டிலும் உலகிலும் பெரிய புவிசார் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜாதக நூல்கள் கூறுகின்றன. இவை பல தசாப்தங்களாக நீடிக்கும் என்று மெதினி ஜோதிடம் கூறுகிறது.

'மயூர் சித்ரம்'

 சூரியன், குரு, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்கள்  ஒரு ராசியில் ஒன்று கூடும் பொழுது போர் அல்லது பெரிய வெகுஜன இயக்கங்கள் போன்ற அவசரகால சூழ்நிலைகள் எழுகின்றன, இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நாரதா முனி எழுதிய 'மயூர் சித்ரம்' என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

'பனிப்போர்'.

பிப்ரவரி 1962 இல், மகரத்தில் 7 கிரகங்கள் இருந்தன, இதன் விளைவாக வல்லரசுகள் அமெரிக்காவும் அப்போதைய சோவியத் ரஷ்யாவும் 'கியூபா ஏவுகணை' நெருக்கடியில் மோதிக்கொண்டன. , போரின் பயம் காரணமாக, உலக அரசியல் இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டது பல தசாப்தங்களாக 'பனிப்போர்'. 'நிலைமை நீடித்து வந்தது.

இஸ்லாமியப் புரட்சி

. 1979 செப்டம்பர் மாதத்தில், ஈரானில் இஸ்லாமியப் புரட்சி காரணமாக சிம்ம  ராசியில் உள்ள 5 கிரகங்களின் சேர்க்கை  முஸ்லிம் உலகில் ஒரு கொந்தளிப்பை உருவாக்கியது, இது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் பரவ வழிவகுத்தது, இது பல நாடுகளில் இந்தியா உட்பட பல தசாப்தங்களாக போர் மற்றும் தீவிரவாதம் தலை தூக்கியது

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார மந்தநிலை

கடந்த ஆண்டு டிசம்பர் 26 2019 ஆம் தேதி தனுசில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது, ​​கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக 5 கிரகங்கள் (ராகு-கேது தவிர) சேர்க்கையால் உலகம் முழுவதும் ஒரு பெரிய மனிதாபிமான சோகத்தை சந்தித்து வருகிறது.

மூன்றாம் உலக போர்

இப்போது இந்த  ஆண்டு பிப்ரவரி 11  2021ஆம் தேதி, சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் , குரு மற்றும் சனி ஆகிய 6 கிரகங்கள் மகரத்தில் ஒன்றாக சேர்ந்து  உலகம் முழுவதும் பெரிய அரசியல் மற்றும் சமூக மாற்றங்களைக் கொண்டு வரலாம். கொரோன வைரஸ் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தலாம். தைவான் , மற்றும் லடாக் பிரச்சனையால் சீனாவால் மூன்றாம் உலக போர் நடக்கலாம்

மேதினி ஜோதிடம்

மேதினி ஜோதிடத்தில், மகர ராசியின் தாக்கம்  குறிப்பாக இந்தியாவில் மீது அதிகம் உண்டு என்று  கருதப்படுகிறது. மகரமானது  இந்தியாவின்  ஜாதகத்தின் ஒன்பதாவது வீடு, இதில் அஷ்டகாவர்காவில் குறைந்த புள்ளி இருப்பதால் மகர  ராசியில் பெரிய கிரகங்களின் சேர்க்கை  இந்தியாவுக்கு மிகவும் கெடு  பலன்களை ஏற்படுத்தலாம் . கொரோனா தொற்றுநோய், பொருளாதார மந்தநிலை மற்றும் சீனாவுடனான எல்லைக்கோடு விரிவாக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, அடுத்த ஆண்டு முதல் பாதியில் பெரும் நெருக்கடியில் சிக்கக்கூடும். 6 முக்கிய கிரகங்களால்

இந்தியாவின் ஜாதகத்தின் 9 வது வீட்டின் செல்வாக்கு காரணமாக, எந்தவொரு சட்டத்திலும் மாற்றம்  செய்தால் அது மிக பெரிய சலசலப்பை ஏற்படுத்தும். இது தவிர, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் பணவீக்கம் காரணமாக நாட்டில் பெரிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மகரத்தில் உள்ள இந்த கிரகங்களின் சேர்க்கை  விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி, ஏனெனில் இந்த நல்ல பருவ நிலை  காரணமாக நல்ல அமோக விளைச்சல் கிடைக்கும்.

எபோலா வைரஸ் தாக்குதல்

அணு ஆயுதங்களை விட கண்ணுக்குத்தெரியாத வைரஸால் நமக்கு ஆபத்து காத்திருக்கிறது. சக்திவாய்ந்த ஏவுகணைக்களைக் காட்டிலும் நுண்ணிய வைரஸ்கள் ஆபத்தானவை, கோடிக்கணக்கான உயிர்களை இவை குடித்துவிடும் ஆபத்து காத்திருக்கிறது

சுவாச வைரஸ்கள் ஒவ்வொன்றாக தோன்றுகின்றன. இவை மிகவும் ஆபத்தானவை. எபோலா போன்ற தொற்றுக்காக நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே பிறருக்கும் பரவி விடுகிறது

பருவநிலை மாற்றம்

முதலில் பருவநிலை மாற்றம். கொரோனாவில் இறந்தவர்களைக் காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் இனி பருவநிலை மாற்றத்தால் கூடுதலான உயிரிழப்புகள் ஏற்படும்

பயொ தீவிரவாதம்:

சேதத்தை ஏற்படுத்த விரும்பும் ஒருவர் ஒரு வைரஸை உருவாக்க முடியும், இயற்கையாக ஏற்படும் தற்போதைய தொற்றுநோய்களைக் காட்டிலும் இது ஏற்படுத்தும் சேதம் அதிகமாக இருக்கும் 

காஷ்மீர் பிரச்சனை:

"காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர உரிமையை பாகிஸ்தான் கொடுக்கும்" - இம்ரான் கான்   காஷ்மீர் விவகாரத்தில் பல தசாப்தங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஐநா சபையின் பொது வாக்கெடுப்பு, நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி, பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். பிப்ரவரி 5, 2021 வெள்ளிக்கிழமை அன்று பேசியுள்ளார்  இது இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையீடு ஆகும். இந்த நிலை நீடித்தால் இந்தியா பாக்கிஸ்தான் அணு ஆயுத போர் மூள வாய்ப்பு உள்ளது.

 

சீனா பேரழிவு

சீனாவில் ஒரு பேரழிவு வரும் நமது அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பாகிஸ்தானின் சந்திர ராசி மிதுனம் ஆகும் , இதன் காரணமாக எட்டாவது வீட்டில் கிரஹ சேர்க்கை  ஒரு பெரிய பூகம்பத்தால் பாகிஸ்தான் நாட்டிற்கு சேதத்தை ஏற்படுத்தும். சீனாவின் ஜென்ம ராசியான , மகரத்தில் சனி-குரு உள்ளிட்ட பிற கிரகங்களின் சேர்க்கை  அங்குள்ள பொருளாதார நெருக்கடியில் அதிருப்தியை ஏற்படுத்தும். சீனாவின் பங்குச் சந்தையில் வீழ்ச்சி உலகெங்கிலும் உள்ள முதலீடர்களுக்கு  ஒரு பெரிய நஷ்டத்தை  தரும்..

உலக நாடுகள் மற்றோரு தீவர கொரோன வைரஸ் நோயால் தாக்குண்டு பொருளாதார அழிவை சந்திக்க நேரிடும்

மேஷம்

10 ல் ஒரு பாபியாவது இருக்க வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகிறது. 10 ல் ஒரு பாபியாவது இருக்க வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகிறது  12 ம் தேதி சூரியன் , சனி , தேய்பிறை சந்திரன் மகர ராசியில் அமர்ந்து இருக்க போகிறார்கள்

சூரியன் பத்தில் அமர ஆட்சி அரசு அரசவை பணி தலைமை பொறுப்பு கலெக்டர் ஆட்சியாளர் இதெலாம் உண்டு

சனி பகவான் எப்போதும் அயராத உழைப்பு அதற்கான வலு, பல ஆயிர மக்களுக்கான உழைப்பு..தலைமை பொறுப்பு...எல்லாவற்றையும் குறிப்பிடுவது மட்டும் அன்றி கர்மத்தை கர்ம பலனை அளிக்கும் முதல் தரும் கிருஹம் ஆவார்

மேஷ ராசிக்கு ஜீவன மற்றும் கர்மஸ்தானமான 10 இடத்தில 6 கிரஹங்களின் சேர்க்கை நடை பெற உள்ளது. தொழில் மற்றும் வேலையில் மிக்க கவனம் தேவை. எதிர்பாராத சிலவு , நஷ்டம் , உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம்.  மேலும் சுக ஸ்தானமான 4 ம் இடத்தை 6 கிரஹங்கள் பார்வை இடுவதால் , வாகனம் மூலம் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது . சொத்து தகராறு வர வாய்ப்பு உள்ளது , மிக எச்சரிக்கையாக இருக்கவும்

10 இடத்தில் இந்த இணைவு நடப்பதால் தொழில் அல்லது உத்தியோகத்தில் சிறிது பயப்படக்கூடிய நிலை ஏற்படும். உங்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டாலே போதுமானது.

ரிஷபம்

ரிஷப ராசியை சேர்ந்தவருக்கு சற்று ஏற்றமான  கால கட்டம் இது  பாக்கியத்தனமான 9 ம் இடத்தை 6 கிரஹங்களும் இருப்பதால்  , ஆறு கிரக கூட்டணியால் சுபங்களைத் தான் அதிகரிக்கும்

ரிஷப  ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9 இடத்தில 6 கிரஹங்களின் சேர்க்கை நடை பெற உள்ளது. எதிர்பாராத செல்வம் சேர்க்கை ஏற்படும் . தீர்த்த யாத்திரை செல்லும் யோகம் ஏற்படும்.  மேலும் தைரிய , வீர்ய . ஸதானமான 3 ம் இடத்தை 6 கிரஹங்கள் பார்வை இடுவதால் , மனோ தைரியம் மிகுந்து காணப்படும், ஒரு சில நேயர்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடலாம் . இளைய சகோதரர்களால் தொல்லைகள் ஏற்படலாம்

மிதுனம்

மிதுன   ராசிக்கு அஷ்டம  ஸ்தானமான 8 இடத்தில 6 கிரஹங்களின் சேர்க்கை நடை பெற உள்ளது.ஒரு சில நேயர்களுக்கு எதிர்பாராத வகையில் உடல் நலம் கெட வாய்ப்புள்ளது. மருத்துவ சிலவுகள் ஏற்படும். மனக்கவலை  மிகுந்து காணப்படும். எதிரிகளின் கை ஓங்கி காணப்படும்.   மேலும் தன , குடும்ப , வாக்கு   ஸதானமான 2 ம் இடத்தை 6 கிரஹங்கள் பார்வை இடுவதால் , சரளமாக பண வரவு ஏற்படும்.  மனோ தைரியம் மிகுந்து காணப்படும், மற்றவர்களை உங்கள் பேச்சால் வசியபடுத்தும் ஆற்றலை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும் வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம் கவனமும் நிதானமும் தேவை. வீண் இழப்புகள் ஏற்படும். 

கடகம்

கடக   ராசிக்கு களத்திர ஸ்தானமான  7 இடத்தில 6 கிரஹங்களின் சேர்க்கை நடை பெற உள்ளது. ஆகையால் , கணவன் மனைவி இடையே கருது வேறுபாடு அதிகரிக்கும். விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை இருந்தால் இதை தவிர்க்கலாம். காதல் ஜோடிகள் சண்டை போட நேரிடும்.

சிலர் காவல் நிலையம் சென்று புகார்  செய்ய நேரிடலாம்.  மேலும்  ஜென்ம ராசியே     6 கிரஹங்கள் பார்வை இடுவதால் , வீண் மனக்கவலை , வரவுக்கு மீறி சிலவு , கடன் வாங்கும் நிலைமை , தொழிலில் மந்தமான போக்கு காணப்படும் புதிய விஷயங்களை முயற்சித்தல், புதிய தொழில், வேலையை தொடங்குவது பிரச்சினையில் சென்று முடியலாம்.

சிம்மம்

சிம்ம   ராசிக்கு ருண , சத்ரு ஸ்தானமான  ஸ்தானமான  6 இடத்தில 6 கிரஹங்களின் சேர்க்கை நடை பெற உள்ளது. ஆகையால் ஒரு சில நேயர்களுக்கு எதிர்பாராத வகையில் உடல் நலம் கெட வாய்ப்புள்ளது. மருத்துவ சிலவுகள் ஏற் படும். மனக்கவலை  மிகுந்து காணப்படும். எதிரிகளின் கை ஓங்கி காணப்படும்., மேலும்  அயன சயன போகஸ்தானமான 12ம் இடத்தை     6 கிரஹங்கள் பார்வை இடுவதால் , வீண் மனக்கவலை , வரவுக்கு மீறி சிலவு , கடன் வாங்கும் நிலைமை , கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் தருவதாக தான் அமையும். மாணவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

கன்னி

 கன்னி   ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான    5 இடத்தில 6 கிரஹங்களின் சேர்க்கை நடை பெற உள்ளது. ஆகையால் ஒரு சில நேயர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் காணப்படும். வேலையில் முன்னேற்றமான போக்கு காணப்படும்.மேலும்  லாப ஸ்தானமான 11ம் இடத்தை     6 கிரஹங்கள் பார்வை இடுவதால் , தொழிலில் வெற்றி உண்டாகும்.

கடன்களை அடைக்கும் நிலை ஏற்படும். பண வரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலை காணப்படும். தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதும், மற்றவர்களிடம் உணர்ச்சிவசப்பட பேசுவதும் வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்தி உங்கள் செயலில் கவனமாக செயல்பட்டாலே

துலாம்

துலா  ராசிக்கு சுக  ஸ்தானமான    4 இடத்தில 6 கிரஹங்களின் சேர்க்கை நடை பெற உள்ளது. ஆகையால் ஒரு சில நேயர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் காணப்படும். வேலையில் முன்னேற்றமான போக்கு காணப்படும. ஒரு சிலர் புதிய வாகனங்கள் , சொத்துக்கள் வாங்கும் நிலை காணப்படும். தாயாரின் உடல் ஆரோக்கியம் நன்கு காணப்படும்.

ஜீவனஸ்தானமான  10ம் இடத்தை     6 கிரஹங்கள் பார்வை இடுவதால் , தொழிலில் வெற்றி உண்டாகும். கடன்களை அடைக்கும் நிலை ஏற்படும். பண வரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலை காணப்படும். ஒரு சிலர் புதிய தொழில் முதலீடு செய்வர். உத்யோக உயர்வு ஏற்படும். விரும்பியே இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். துலாம் ராசி அதிபதியான சுக்கிரனும், அவருக்கு நெருங்கிய நட்பு கிரகமான சனியின் வீடான மகரத்தில் சேர்ந்து சஞ்சரிக்கின்றனர். 

நட்பு கிரகமாக சனி மூலமாக ஒரு சிலருக்கு வாகனம் , நிலம் , வீடு வாங்கும் யோகம்  உண்டாகும்.

​விருச்சிகம்

விருச்சிக   ராசிக்கு தைரிய , வீர்ய ஸ்தானமான    3 இடத்தில 6 கிரஹங்களின் சேர்க்கை நடை பெற உள்ளது. ஆகையால் ஒரு சில நேயர்களுக்கு மனோ தைரியம் மிகுந்து காணப்படும், ஒரு சில நேயர்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடலாம் . இளைய சகோதரர்களால் தொல்லைகள் ஏற்படலாம்

 

பாக்கிய ஸ்தானமான  9ம் இடத்தை     6 கிரஹங்கள் பார்வை இடுவதால் , தொழிலில் வெற்றி உண்டாகும். கடன்களை அடைக்கும் நிலை ஏற்படும். பண வரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலை காணப்படும். ஒரு சிலர் புதிய தொழில் முதலீடு செய்வர். உத்யோக உயர்வு ஏற்படும். விரும்பியே இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். இந்த ராசி நேயர்களுக்கு வாழ்க்கையில்  திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். சனிபகவானால் உங்களுக்கு நல்ல பலன்களே ஏற்படும்.. இந்த 6 கிரக சேர்க்கையால் எந்த ஒரு பெரிய பாதிப்பும்  ஏற்படாத நிலை தான் உள்ளது. அதனால் எந்த கவலையும்பட தேவையில்லை. நிதி நெருக்கடிகள் நீங்கி பண வரவு சரளமாக இருக்கும்.

                         தனுசு

  தனுசு   ராசிக்கு     2இடத்தில 6 கிரஹங்களின் சேர்க்கை நடை பெற உள்ளது. சரளமாக பண வரவு ஏற்படும்.  மனோ தைரியம் மிகுந்து காணப்படும், மற்றவர்களை உங்கள் பேச்சால் வசியபடுத்தும் ஆற்றலை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும் வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம் கவனமும் நிதானமும் தேவை. வீண் இழப்புகள் ஏற்படும்.

அஷ்டம  ஸ்தானமான  8ம் இடத்தை     6 கிரஹங்கள் பார்வை இடுவதால் , எதிர்பாராத வகையில் உடல் நலம் கெட வாய்ப்புள்ளது. மருத்துவ சிலவுகள் ஏற் படும். மனக்கவலை  மிகுந்து காணப்படும். எதிரிகளின் கை ஓங்கி காணப்படும் பேச்சு, செயலில் கவனமாக செயல்படுங்கள். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் கவனம் வேண்டும்.

பேச்சு, செயலில் ல் நிதானமாக இருப்பது நல்லது. சிலருக்கு வேலையில் அல்லது தொழிலில் நெருக்கடி ஏற்படலாம்

                          மகரம்

மகர    ராசிக்கு ஜென்மத்தில்      1 இடத்தில 6 கிரஹங்களின் சேர்க்கை நடை பெற உள்ளது. சற்று குழப்பமான நேரம் இது. பண வரவு தடை பெற்று காணப்படும். எதிரிகளின் கை ஓங்கி காணப்படும்.

 

காலத்திர ஸ்தானமான  7ம் இடத்தை     6 கிரஹங்கள் பார்வை இடுவதால் , எதிர்பாராத வகையில் உடல் நலம் கெட வாய்ப்புள்ளது. மருத்துவ சிலவுகள் ஏற் படும். மனக்கவலை  மிகுந்து காணப்படும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு மேலோங்கி காணப்படும். ஒரு சிலர் பிரிய நேரிடும். வம்பு , வீண் வழக்குகளில் சிக்க நேரிடும். மிகவும் எச்சரிக்கையாக நடக்க வேண்டும்

உங்கள் ஜென்ம ராசியான மகர ராசியில் 6 கிரக சேர்க்கை நிகழப்போகிறதே என்ற கவலை  வேண்டாம். .  நண்பர்கள் அல்லது உறவினர்கள்  சிலர் உங்களை வெறுப்பேற்றுவது போல நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. குடும்ப உறவில் விரிசல் ஏற்படாமல் விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை வேண்டும்

​கும்பம்

கும்ப    ராசிக்கு அயன , சயன , போக ஸ்தானமான   12 இடத்தில 6 கிரஹங்களின் சேர்க்கை நடை பெற உள்ளது. சற்று குழப்பமான நேரம் இது. பண வரவு தடை பெற்று காணப்படும். எதிரிகளின் கை ஓங்கி காணப்படும். , வீண் மனக்கவலை , வரவுக்கு மீறி சிலவு , கடன் வாங்கும் நிலைமை , கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் தருவதாக தான் அமையும். மாணவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

ருண சத்ரு  ஸ்தானமான  6ம் இடத்தை     6 கிரஹங்கள் பார்வை இடுவதால் , எதிர்பாராத வகையில் உடல் நலம் கெட வாய்ப்புள்ளது. மருத்துவ சிலவுகள் ஏற் படும். மனக்கவலை  மிகுந்து காணப்படும். உடல் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்படும். எதிரிகள் கை ஓங்கி காணப்படும். வரவுக்கு மீறி சிலவுகள் நேரிடும். கடன் வாங்கி அதனை சமாளிக்கும் நிலைமை ஏற்படும். .உங்கள் ஆரோக்கியம் பாதிக்க படலாம். மருத்துவ சிலவுகள் ஏற்படலாம். மிக்க எச்சரிக்கையாக இருப்பது நலம்

 

                    மீனம்

மீன    ராசிக்கு லாப  ஸ்தானமான   11 இடத்தில 6 கிரஹங்களின் சேர்க்கை நடை பெற உள்ளது. பணவரவு சரளமாக காணப்படும். எத்ரிபாரத லாபம் ஏற்படும். தொழிலில் வெற்றி உண்டாகும். புதிய ஆடை , ஆபரணம் , சொத்து சேர்க்கை ஏற்படும்.

 

பூர்வ புண்ணிய   ஸ்தானமான  5ம் இடத்தை     6 கிரஹங்கள் பார்வை இடுவதால் , முன்னோர்களின் ஆசி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். எதிர்பாராத தன லாபம் ஏற்படும். செயும் தொழிலை விரிவாக்குவீர்கள் . குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடை பெரும்.

மீன ராசிக்கு அதிக பாதிப்புகள் ஏற்படாது. குடும்பம் குதூகலமாக காணப்படும். சுப சிலவுகள் ஏற்படும். வேலை மற்றும் தொழில் நன்றாக நடக்கும் . கணவன் மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கும்

பிப்ரவரி 11, 12ம் தேதிகளில் சனி சுக்கிரன் புதன் சூரியன் சந்திரன் குரு ஆகிய 6 கிரக  மகர ராசியில் ஒன்றாக சேர்க்கை மிகவும் எச்சரிக்கை தேவை.

பரிஹாரம்

உத்திராடம் திருவோணம் அவிட்டம் நடசத்திரக்காரர்கள் வரும் 11ம் தேதி 12ம் இரண்டு நாட்களும் மிகுந்த மன ஆழுத்ததிற்கு உள்ளாவார்கள். அவர்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அல்லது ராமர் கோவிலுக்குச் சென்று அவரவர் கோத்ரம் (பெயர்)நட்சத்திரம் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

குறைந்தது 3 நாட்களுக்கு அதிகமான காயத்ரி ஜபம் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் விஷ்ணு சஹஸ்ர நாம  பாராயணம் கெடு பலன்களை குறைக்கும்.

வேதபாராயணம், நவகிரகங்கள் ஸ்தோத்திரம்,கோளறு பதிகம் பலமுறை சொல்லவேண்டும்.

No comments:

Post a Comment