Search This Blog

Wednesday, February 17, 2021

விபரீத ராஜயோகம் என்றால் என்ன? உங்கள் ஜாதகத்தில் விபரீத ராஜ யோகம் உள்ளதா ? நீங்கள் லாட்டரி மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆவீர்களா ?

 விபரீத ராஜயோகம் என்றால் என்ன?

உங்கள் ஜாதகத்தில் விபரீத ராஜ யோகம் உள்ளதா ? நீங்கள் லாட்டரி மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆவீர்களா ?



விபரீத ராஜயோகம் என்பது, எதிர்பாராத வழியில் ஒருவர் திரண்ட செல்வ சேர்க்கை  அல்லது உயர் பதவியை அடைவதைக் குறிக்கிறது. லாட்டரி மூலம் திடீர் தனவரவு , பங்கு சந்தை முதலீடு மூலம் திடீர் செல்வ சேர்க்கை , வியாபாரத்தின் மூலமாக திரண்ட செல்வ சேர்க்கை ஏற்படுவதை குறிக்கிறது.

ஜோதிடத்தில் 6, 8, 12 - ம் பாவங்கள் மறைவு ஸ்தானங்கள் எனப்படும் சாதகமற்ற வீடுகளாக சுட்டிக் காட்டப்படுகின்றன.

பாதக வீடுகள் எனப்படும் இந்த 6, 8, 12 - ம் பாவங்களின் அதிபதிகள் தங்களுக்குள் ஒன்றிணைந்து அல்லது மேற்கண்ட 6, 8, 12 - ம் வீடுகளுக்குள்ளேயே மாறி பரிவர்த்தனை நிலையில் அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகம்.

முற்றிலும் எதிர்பாராத ஒரு நிலையில், எளிய  வகையில் அல்லது குறுக்கு அதிர்ஷடம் மூலமாக  ஒருவருக்கு திரண்ட செல்வ சேர்க்கை  கிடைப்பது அல்லது அரசாளும் வாய்ப்பு கிடைப்பதே விபரீத ராஜயோகம்'

 


வாழ்க்கையில் அடி  மட்டதில் கூலி  தொழில் செய்தும் கொண்டும், சாப்பாட்டுக்கு கூட கஷ்டம் அனுபவிக்கும் பலரும், சுகபோக வாழ்க்கை இந்த பிறவியில்  கிடைக்காது என்று நாம் பார்க்கும்  பலர் இந்த யோகத்தின் மூலம் சமூகத்தில் மேல் நிலையை அடைகின்றனர். லாட்டரி சீட்டுக்கள் மூலம் யோகத்தை கொடுத்து திக்கு முக்காட வைத்து தகுதிக்கு மீறிய வாழ்வு தந்து அதை அனுபவிக்கும் யோகத்தை தந்து விடுகிறது. அந்த காலத்தில் புதையல் மூலமாக செல்வந்தராகி உள்ளனர்.

 

ஜாதகத்தில் 3, 6, 8, 12ம் இடங்கள் மறைவு ஸ்தானம். இந்த அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் இடம் மாறி நின்றால் அது விபரீத ராஜ யோகம் என்று கூறப்படுகிறது.

6க்கு உரியவன் 8ல் இருந்தால், 8க்கு உரியவன் 12ல் இருந்தால் இதெல்லாம் விபரீத ராஜ யோகம். அதாவது “கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம்என்று ஒரு வாக்கு உண்டு.

கெட்ட வீட்டிற்குரிய ஒரு கிரகம், மற்றொரு கெட்ட வீட்டில் போய் அமர்ந்தால் விபரீத ராஜ யோகத்தை உண்டாக்கும். அதாவது மைனஸ் x மைனஸ் = பிளஸ் என்பது போன்றது.




விபரீத ராஜ யோகம்- ஜாதக  பாடல்

கேளப்பா சத்ரு ஸ்தானாதிபதி விரய ஸ்தானாபதி மற்றும்

அட்டமாதிபதி தங்களுக்குள் வீடு மாறி நின்றாலும் , பரிவர்த்தனை

பெற்றாலும் கூடிடும் திடீர் பெருந்தச்செல்வம் புதையாலால் ராஜாவுக்கு

நிகராக சேர்ந்திடும் மறவாதே இவர்களின் தசை புத்தியில் தவறாமல்

சக்கரவர்த்திக்கு நிகராக திடீர் செல்வம் பெற்று சுக ஜீவியாய் வாழ்வான் இந்த பூமியில்

பலதீபிகை சாஸ்திரம்

இந்த 6,8,12 ம் அதிபதிகளால் உண்டாகும் யோக நிலையை பலதீபிகை சாஸ்திரம் இன்னும் தெளிவாகச் சொல்கிறது . 6,8,12 ம் அதிபதிகள் பன்னிரண்டு பாவங்களில் எங்கே அமர்ந்தாலும் , அக்கிரகத்தை இயற்கை பாவக்கிரகங்கள் பார்க்கவே ,இணையவோ செய்தல் உண்டாகும் யோகங்களைச் சொல்கிறது .இவ்வகை கிரக நிலை

 1. அவயோகம் ,

2. நிஸ்வா யோகம் ,

3. மிருத்யோகம் ,

4. குகூ யோகம் ,

5. பாமர யோகம்

,6. துர் யோகம் ,

7. தரித்திர யோகம்

,8. ஹர்ஷ யோகம் ,

9. துஷ் கீர்த்தி யோகம் ,

10. சரள யோகம் ,

11. நிர் பாக்ய யோகம் ,

12. விமல யோகம் ,என வகைப்படுகிறது .

இதில் (6) ஹர்ஷ யோகம் என்பது நன்மை செய்யும் யோகம் .

இதன்படி 6 ம் அதிபதி 6,8,12 ஆகிய ஏதேனும் ஒரு துஷ் ஸ்தானத்தில் அமர ,6 ம் ஸ்தானத்தை இயற்கை பாவ கிரகம் பார்க்கவோ ,அமரவோ வேண்டும் .இதனால் ஜாதகர் வாழ்வில் மகிழ்ச்சி ,நல்ல எதிர்காலம் ,ஸ்திரமான தொழில் எதிரிகளை எளிதில் வெற்றி பெறல் ,பாவச் செயல் மனம் அச்சப்பட்டு நேர்மையான வாழ்வு அமையும்.

அசுர யோகம்

8 ம் யோகமான சரள யோகம் ,8 ம் அதிபதி ,துஷ் ஸ்தானங்களில் ஏதேனும் ஒன்றில் அமர ,எட்டாம் ஸ்தானத்தை இயற்கை பாவக் கிரகம் பார்க்கவோ,இணையவோ வேண்டும் இதன் படி ஜாதகருக்கு நீண்ட ஆயுள் ,தைரியம்,மரியாதை ,முன்னேற்றம் , கல்வி இவை உண்டு .வியாபார வெற்றி ,புத்திர மகிழ்வும் உண்டு .

விமல யோகம்

12 ம் யோகமான விமல யோகம் 12 ம் அதிபதி ,துஷ் ஸ்தானங்களில் ஏதேனும் ஒன்றில் அமர ,பனிரெண்டாம் ஸ்தானத்தை இயற்கை பாவக்கிரகம் பார்க்க ,அமர வேண்டும் .இதன் படி ஜாதகர் சிக்கனமான செலவு செய்து அதிக சேமிப்பு செய்வார் எல்லோருக்கும் நல்லவராக அமைவார் .சுதந்திரமாக செயல்பட்டு எல்லோரின் மதிப்பை யும் பெறுவார் .

பொதுவாக 6,8,12 ம் அதிபதிகள் துஷ் ஸ்தான அதிபதிகள் .ஆனாலும் அவர்கள் நிற்கும் ஸ்தான ,இணையும் கிரகம் ,இவற்றை பொறுத்து நன்மை,தீமை அமையும்.

6,8.12 இடங்களில்  அமர்ந்த6,8.12ம்  கிரஹங்கள் தசை , புத்திகளில் திடீர் தன யோகம் ஏற்படுகிறது

பரிவர்த்தனை யோகம்


 
பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தரும் பலனை போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பானி சோதிடம் -300" என்ற நூலில் 98 வந்து பாடலில் பரிவர்த்தனை யோகம் பற்றி விளக்குகிறார்.

"
தானென்ற கோள்களது மாறி நிற்க
தரணிதனில் பேர் விளங்கும் தனமுள்ளோன்
ஊனேன்ற உடல் நாதன் பாம்பு கூடில் உத்தமனாம் யோக்கியனாம் புனிதன் சேயன்
கோனேன்ற குமரியுட பூசை செய்து கொற்றவனே குவலயத்தில் வாழ்ந்திருப்பான்
மானேன்ற மறலி பயம் இல்லையில்லை
மைந்தனே இடமறிந்து வலுத்துவாயே
"

பாடல் விளக்கம்

 
நல்ல பரிவர்த்தனை யோகம் பெற்ற ஜாதகன் நற்புகழுடனும் , செல்வத்துடனும் இருப்பான் .ஒழுக்க சீலனாகவும், பெண்தெய்வ வழிபாடு உடையவனாகவும் இருப்பான் .
எமனுக்கு பயப்படாத ஆத்ம ஞானம் பெற்றிருப்பான் .
இவைகள் யாவும் கிரகங்கள் அமரும் இடத்தை உணர்ந்து பலன் உரைப்பாய்.


'விற்காத லாட்டரி'12 கோடி லாட்டரி பரிசு

சொந்தக்காரங்க ஒருத்தர் கூட எட்டி பாத்தது இல்ல'... 'இப்போ என்னா பாசம்'... வாழ்க்கையையே புரட்டி போட்ட 'விற்காத லாட்டரி'... தென்காசிகாரருக்கு அடித்த பம்பர் தொகை!

வாழ்க்கை எந்த நேரத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் எப்படியும் மாறலாம் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளார் இந்த தென்காசிகாரர்.

நாங்கள் அண்ணன் தம்பி மூன்று பேர். எங்களுக்கு அப்பா இல்லாத காரணத்தினால் சிறு வயதிலேயே வீட்டோட கஷ்டத்தை புரிந்துகொண்டு வெளிநாட்டுக்குப் போயி வேலை பார்த்தேன். 9 வருஷமா அந்த பாலைவனத்தில் கஷ்டப்பட்டதுக்கு ஒரு பலனும் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் ஊருக்கு வந்த நான் லாட்டரி கடை போட முடிவு செய்தேன். ஆனால் தமிழ்நாட்டில் அதற்குத் தடை என்பதால் பைக்கில் சென்று கேரளாவில் விற்று விட்டு வருவேன்.

என்கிட்ட சீட்டு வாங்கினவர்கள் நிறையப் பேருக்குப் பரிசு விழுந்துருக்கு. அப்போதெல்லாம் அவ்வளவு சந்தோஷமா இருக்கும். இந்த சூழ்நிலையில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி வியாபாரம் நடைபெற்றதது. அதில் விற்காமலிருந்த மீதி லாட்டரியை கடையில் வைத்திருந்தேன். அதில் விக்காத சீட்டுக்கு 12 கோடி லாட்டரி விழுந்ததா அறிவித்தார்கள். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியாமல் நின்று அப்பா இல்லாத எங்களைச் சொந்தக்காரர்கள் இதுவரை வந்து பார்த்தது கூட இல்லை. ஆனால் இப்போது பரிசு விழுந்ததைப் பார்த்து விட்டு பலரும் எங்கள் வீட்டிற்கு நலம் விசாரிக்க வருகிறார்கள். அவர்களைப் பார்க்கும் போது கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது. பரிசு பணத்தில் முதலில் மூத்த அண்ணனின் மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க வேண்டும்.ண்டிருந்தேன்.

சுரஃபுதீனும் அவரது மனைவியும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இந்தத் தம்பதிக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் வயதில் ஒரு மகன் இருக்கிறார். தனக்காக இல்லாவிட்டாலும் தன் மகனுக்காகவாவது தன் மனைவி திரும்பி தன்னிடம் வரவேண்டுமென விரும்புகிறார் சுரஃபுதீன். "

அவனை நல்லா படிக்க வேண்டும். எனக்காக இல்லைன்னாலும் என் மகனுக்காகவாவது என் மனைவி வரணும். அவர்கள் வருவாங்கன்னு நான் நம்புகிறேன். அவர்கள் வந்த பிறகுதான் இந்த பரிசு கிடைத்ததுக்கான முழு சந்தோஷமும் எனக்கு கிடைக்கும்" என கண் கலங்கியவாறே முடித்தார் சுரஃபுதீன்.

12 கோடி ரூபாய் பரிசுப் பணத்தில் வரி பிடிக்கப்பட்டது போக, கிட்டத்தட்ட 7.5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக சுரஃபுதீனுக்குக் கிடைக்கும். வாழ்க்கை நமக்குப் பல சோதனைகளைக் கொடுக்கும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் நமது பாதையில் முன்னேறிச் சென்று கொண்டிருந்தால் வாழ்க்கை நிச்சயம் ஒரு நாள் மாறும் என்பதற்கு உதாரணமாக நிற்கிறார் சுரஃபுதீன்.



லாட்டரியில் ரூ.6 கோடி பரிசு; அதில் வாங்கிய நிலத்தில் புதையல்; முதியவருக்கு அடுத்தடுத்த அதிர்ஷ்டம்!

கதையல்ல நிஜம்: கிறிஸ்துமஸ் லாட்டரியில் ஜாக்பாட் அடிக்க, பல்கு அமொண்ட் பரிசு விழுந்தது. அவரது நீண்டநாள் விவசாய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அதில் நிலம் வாங்கினார். அந்த நிலத்தில் கிடைத்தது புதையல்...
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொண்டுமட்டுமல்ல, சில சமயங்களில் குழி தோண்டுகையிலும் கொடுக்கும் என்பதை மெய்பித்துள்ளது கேரளாவைச் சேர்ந்த ரத்னகரன் பிள்ளையின் வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்த மகிழ்வு அளிக்கும் நிகழ்வுகள். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த கிளாமானூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் ரத்னகரன் பிள்ளை. முன்னாள் வார்டு உறுப்பினர். கடந்த ஜனவரியில் தான், அதிர்ஷ்டதேவதை 66 வயதான பி.ரத்னகரன் பிள்ளை மீது ஒரு பரந்த புன்னகையைப் பறக்கவிட்டு, அவருக்கு கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி வெற்றியை பெற்று தந்தது. லட்டரியில் அவருக்கு அடித்ததோ 6 கோடி ரூபாய்ய்ய்...

சில மாதங்களுக்கு முன், திருவனந்தபுரத்தின் கிளிமனூரில் உள்ள அவரது வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் வளமான 27 சென்ட் நிலத்தை வாங்கினார். திருப்பல்கடல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி க்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் ஒரு பழைய கிருஷ்ணா கோயிலுக்கு அடுத்ததாக இருந்தது அவரது விவசாய பூமி.

உங்கள் ஜாதகத்தில் விபரீத ராஜ யோகம் உள்ளதா ? நீங்கள் லாட்டரி மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆவீர்களா ?

1. 6, 8, 12 - ம் பாவங்களின் அதிபதிகள் தங்களுக்குள் ஒன்றிணைந்து அல்லது மேற்கண்ட 6, 8, 12 - ம் வீடுகளுக்குள்ளேயே மாறி பரிவர்த்தனை நிலையில் அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகம்.

2. கெட்ட வீட்டிற்குரிய ஒரு கிரகம், மற்றொரு கெட்ட வீட்டில் போய் அமர்ந்தால் விபரீத ராஜ யோகத்தை உண்டாக்கும்

3. 6,8.12 இடங்களில்  அமர்ந்த6,8.12ம்  கிரஹங்கள் தசை , புத்திகளில் திடீர் தன யோகம் ஏற்படுகிறது

4. ஹர்ஷ யோகம் -6ம் அதிபதி 6ம் வீட்டில் அமர்ந்துஇருப்பது ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமைந்தால் அதிக யோகத்தை தரும்

அசுர யோகம் -8ம் அதிபதி 8ம் வீட்டில் அமர்ந்துஇருப்பது ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமைந்தால் அதிக யோகத்தை தரும்

விமல யோகம்-8ம் அதிபதி 8ம் வீட்டில் அமர்ந்துஇருப்பது ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமைந்தால் அதிக யோகத்தை தரும்

No comments:

Post a Comment