Search This Blog
Monday, April 5, 2021
இடு கதிர் செவ்வாய் கூடி எங்கே நின்றாலும் இருதாரம் தானே
சூரியனும் செவ்வாயும் கூடி ஜாதக கட்டத்தில் எங்கு நின்றாலும் இரு தாரமா ?
இடு கதிர் செவ்வாய் கூடி எங்கு நின்றாலும் இரு தாரம் தானே
திருமண பொருத்தம் ஏன் கட்டாயம் பார்க்கவேண்டும் ?
மேஷ ராசி மகர லக்கினம் லக்கினத்தில் குரு நீச்சம் அம்சத்தில் குரு உச்சம் 7ம் அதிபதி 4ல் உள்ளார் 7 ம் இடத்தை நீச்சம் பெற்ற குரு பார்க்கிறார். ஆனால் திருமண வாழ்வு சுகப்படவில்லை. மனைவி 7 வருடமாக பிரித்து உள்ளார். ஜாதகத்தை மாற்றி கொடுத்து திருமணம் செய்து உள்ளார்கள். விவாகரத்து வேண்டி கோர்ட்டில் வழுக்கு நிலுவையில் உள்ளது.
இடு கதிர் செவ்வாய் கூடி எங்கே நின்றாலும் இருதாரம் தானே
அனுஷம் நட்சத்திரம் 38 வயது பெண் ஜாதகம்
மேற்கண்ட ஜாதகத்தில் 7ம் அதிபதியான சந்திரன் நீச்சம் ஆனால் நீச்சன் நின்ற ரா சியாதிபதியான செவ்வாய் லக்கினத்திற்கு 10ம் இடமான கேந்திரத்தில் இருப்பதால் நீச்ச பங்க ராஜ யோகம். லகனாதிபதி சனி உச்சம். புலிப்பாணி குடிநாதன் நிலை அறிந்து பலன் சொல்லு என்று கூறுவார். 7ம் அதிபதி நீச்சம் பெற்றாலும் நீசபங்க ராஜ யோகம் பெற்றதாலும் , , லக்கினாதிபதி வலு பெற்று சச யோகம் அமையப்பெற்றதாலும் , திருமண வாழ்வில் தினந்தோறும் சண்டை சச்சரவு காணப்பட்டாலும் , திருமண வாழ்வில் முறிவு ஏற்படவில்லை
செவ்வாய் தோஷம் மட்டுமல்ல களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், ராகு கேது தோஷம் என பல அமைப்புகள் திருமண தடையை ஏற்படுத்தும்.
2,7,8ம் வீடுகளில் பாபக்கிரகங்கள் இடம் பெற்றிருக்கவோ, பாவிகள் சேர்க்கையோ இருக்கக் கூடாது. 7ம் இடத்துக்குரிய அதிபர் நீசம், மறைவு ஸ்தானங்கள் பெறக்கூடாது. பகை வீடு சேராமலும் இருக்கவேண்டும்.
களத்திர ஸ்தானம் என்னும் 7ஆம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இந்த ஐந்தும் நின்றால் களத்திர தோஷம் என்கின்றனர்.
கல்யாணம் ஆக வேண்டும் என்பதற்கு ஆக சிலர் பொய்யான ஜாதகத்தை தருகின்றனர். அது பின்னர் சிக்கலில் முடிகின்றது.
இடு கதிர் செவ்வாய் கூடி எங்கு நின்றாலும் இரு தாரம் தானே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment