Search This Blog

Saturday, May 15, 2021

பித்ரு தோஷங்களை நீக்கும் திலதர்ப்பணிபுரி ஸ்ரீ முத்தீஸ்வரர்

 

பித்ரு தோஷங்களை நீக்கும் திலதர்ப்பணிபுரி ஸ்ரீ முத்தீஸ்வரர்

ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளதை எப்படி அறிவது ?

ஜாதகத்தில் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அது பித்ரு தோஷத்தை தரும். மேலும் ஜாதகத்தல் திரிகோண ஸ்தானமான 1,5, 9 மற்றும் 7ம் இடத்தில ராகு அல்லது கேது

அமையப்பெற்றால் , அது பித்ரு தோஷத்தை ஏற்படுத்துகிறது.

பித்ரு தோஷம் தரும் தீமை பலன்கள்

திருமண தடை , குழந்தையின்மை , தெய்வானுக்கிரக இன்மை , தீராத நோய் , பூர்விக சொத்துக்களை அனுபவிக்க முடியாத நிலை , குடும்பத்தில் சண்டை சச்சரவு , தொழில் தடை, கடன் தொல்லை போன்ற தீய பலன்களே நடை பெரும்

திலதர்ப்பணிபுரி

திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி விளங்குகிறது. ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன.


பித்ரு கடமை

ராமர் இலங்கை செல்லும் வழியில் திலதர்ப்பணிபுரிக்கு வந்து இங்குள்ள அரசலாற்றில் நீராடி தன் தந்தை தசரதனுக்கும், ஜடாயு பறவைக்கும் வந்து இங்குள்ள அரசலாற்றில் நீராடி தன் தந்தை தசரதனுக்கும், ஜடாயு பறவைக்கும் பித்ரு கடமைகளைச் செய்தார்.

பித்ரு தலம்

அவர்களும் மனம் குளிர்ந்து ஸ்ரீராமரின் பித்ரு கைங்கர்யங்களை நேரில் வந்து ஏற்றுக் கொண்டு அவர்களை ஆசீர்வதித்தனர். இவ்வாறாக இத்தலம் பித்ரு தலம் ஆகியது.

நட்சோதி மகாராஜா

கோதாவரி நதிக் கரையில் போகவதி என்னும் ஊரை ஆண்ட நட்சோதி மகாராஜா திலதர்ப்பணபுரி திருத்தலம் வந்து, அமாவாசை அன்று பித்ரு பூஜைகள் செய்து, பிண்ட தானம் வழங்கினார். பித்ருக்கள் நேரில் வந்து பிண்ட தானம் பெற்று மனம் குளிர்ந்து ஆசி வழங்கினர்.

எள் தர்ப்பணம்,

திலகைப்பதி, கோவில்பத்து, சிதலபதி என்ற பெயர்களையும் உடைய திலதர்ப்பணபுரி ஆலய சிவ சன்னதியில், நம்பிக்கையோடு செய்யப்படும் எள் தர்ப்பணம், யாகம், அர்ச்சனை அனைத்தும் விசேஷம் வாய்ந்தது.

ஸ்ரீ முத்தீஸ்வரர்

இங்கு பத்தாயிரம் ருத்ராட்சங்கள் கொண்ட ருத்ராட்சப் பந்தலின் கீழ் நாகம் குடை பிடிக்க ஸ்ரீ முத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.



ஸ்ரீராமர் தர்ப்பணம் செய்யும் காட்சி

பிதுர் லிங்கங்களுக்கு நேராக வலது காலை மண்டியிட்டு ஸ்ரீராமர் தர்ப்பணம் செய்யும் காட்சி. நட்சோதி மன்னன் தர்ப்பணம் செய்யும் காட்சி போன்றவற்றை இத்திருக் கோயிலில் காணலாம். இக்கோயில் மகாளய பட்சமாகிய 15 நாட்கள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

காருண்ய தர்ப்பணம்

சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப்படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும்.



எப்படி செல்வது ?

திலதர்ப்பணபுரி திருக்கோவில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

No comments:

Post a Comment